"ஆளுநர்" மோசமாக நடந்து கொண்டார்.. டங்க் ஸ்லிப்பான அண்ணாமலை.. ஆகா அவரே கன்பியூஸ் ஆகிட்டாரே!
சென்னை: சபாநாயகர் சரியாக நடந்து கொள்ளாததால் ஆளுநர் அவையில் இருந்து நேற்று வெளியேறினார் என்று கூறுவதற்கு பதிலாக "ஆளுநர்" மோசமாக நடந்து கொண்டார்.. அதனால் ஆளுநர் வெளிநடப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று சட்டசபை ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆர். என் ரவி உரை நிகழ்த்தினார்.

சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு வைத்தார். இதன் காரணமாகவே உரையை பாதியில் நிறைவு செய்ததாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்தார் .
தமிழ்நாடு அரசின் நீண்ட கால் மரபை.. அதாவது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும் மரபை ஆளுநர் ஆர். என் ரவி மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வருகின்றன. இதுவே நேற்று சட்டசபையில் இந்த களேபரங்கள் நடக்க காரணம் ஆகும்.
அப்பாவு பதிலடி: தேசிய கீதத்தை இசைக்கவில்லை என்ற ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு வைத்துள்ளார். அதில், ஆளுநர் குறைவாக வாசித்ததை குறையாக சொல்லவில்லை, உங்கள் மனதில் உள்ளதை சொன்னீர்கள். எங்கள் மனதில் உள்ளதை நாங்களும் சொல்கிறோம்.
இந்த அவையில் அவரவர் தங்களுக்கு விருப்பமானதை, மனதில் தோன்றியதை எல்லாம் பேச முடியாது. 1 பைசாவையும் மத்திய அரசு தரவில்லை. சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் குறைந்தவர்கள் இல்லை.
ஆளுநர் ரவியிடம் முழு உரையும் முன்பே கொடுக்கப்பட்டது. அவரின் ஒப்புதல் பெற்றுத்தான் உரை அவைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை அவர் முழுமையாக படிக்கவில்லை. இங்கே ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் உத்தரவிட்டு இருக்கிறார். இதையடுத்து ஆளுநர் உரையை நான் வாசித்தேன். சட்டசபையில் தேசிய கீதம் ஆளுநர் உரைக்கு பின் பாடப்படும் என்பதே மரபு. அதை மாற்றும்படி ஆளுநர் ரவி கூறினார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர். என் ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான், சபாநாயகர் சரியாக நடந்து கொள்ளாததால் ஆளுநர் அவையில் இருந்து நேற்று வெளியேறினார் என்று கூறுவதற்கு பதிலாக "ஆளுநர்" மோசமாக நடந்து கொண்டார்.. அதனால் ஆளுநர் வெளிநடப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சபாநாயகர் என்று சொல்வதற்கு பதிலாக டங்க் ஸ்லிப் ஆகி ஆளுநர் மீதே அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார்.
அண்ணாமலை தனது பேட்டியில், ஆளுநர் முறைதவறி நடந்து கொண்ட காரணத்தால் ஆளுநர் சபையை விட்ட வெளியேறினார். இப்போது ஜனகன மன போடாததால் ஆளுநர் வெளியேறிவிட்டார் என்று ஆளுநர் மாற்றி பேசுகிறார். ஆளுநர் என்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும்.
ஆனால் ஆளுநர் அப்படி இல்லை. ஆளுநர் திமுகவின் ஆள் போல செயல்படுகிறார். ஆளுநர் முறைதவறி நடந்து கொண்டு இருக்கிறார். ஆளுநருக்கு இங்கே எந்த பிஸினஸும் இல்லை . ஆளுநர் திமுகவின் உறுப்பினரை விட மோசமாக நடந்து கொண்டார். அதனால் ஆளுநர் வெளிநடப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. (இதையடுத்து தனது தவறை உணர்ந்து சபாநாயகர் என்று அண்ணாமலை திருத்தம் செய்தார்)
ஆளுநர் பேசியது சரியோ, தவறோ அதை உறுப்பினர்கள் சொல்லட்டும். அவையில் ஆளுநரை வைத்துக்கொண்டே அவரை பற்றி தவறாக பேசியிருப்பதை எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அண்ணாமலை விமர்சனம் வைத்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications