ஆவடி நாசர் கல் எறிந்த விவகாரம்! இப்படி ஒரு அமைச்சரை இந்திய வரலாற்றில் பார்த்ததுண்டா? அண்ணாமலை கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாற்காலி எடுத்து வர தாமதம் ஆனதால் அதை எடுத்து வரசொன்னவர் மீது அமைச்சர் ஆவடி நாசர் கல் எறிந்த சம்பவம் இதுவரை இந்திய வரலாற்றில் எந்தவொரு அமைச்சரும் செய்யாத காரியம் என தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் நாளை மாலை வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அந்த பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் இன்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அமர்வதற்கு நீண்ட நேரம் ஆகியும் நாற்காலியை யாரும் எடுத்து வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் ஆவடி நாசர் , நாற்காலி எடுத்து வரச் சொன்னவர்கள் மீது கல்லெறிந்துள்ளார.

வீடியோ

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அந்த வீடியோவில் அமைச்சர் நாசர், போடா ஒரு சேர் எடுத்துட்டு வா, போடா ஒரு டேர் எடுத்துட்டு வாடா என கோபமாக பேசியதுடன் கற்களை தூக்கி எறியும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றில் எந்த அமைச்சராவது மக்கள் மீது கற்களை வீசுவதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? இந்த வீடியோவில் பொதுமக்கள் மீது கற்களை வீசுபவர் வேறு யாருமில்லை, திமுக அமைச்சர் ஆவடி நாசர். கோபத்தில் மக்கள் மீது கற்களை வீசுகிறார்.

கண்ணியமே இல்லை

கண்ணியமே இல்லை

கொஞ்சம் கூட கண்ணியமே இல்லை. மக்களை அடிமைகள் போல் நடத்துகிறார்கள். இதுதான் உங்களுக்கான திமுக! என அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஒரு அதிகாரியின் ஜாதியின் பெயரை கூறி அழைத்ததாக ஒரு பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தனர்.

 ராஜகண்ணப்பன்

ராஜகண்ணப்பன்

இந்த நிலையில் சில நாட்கள் கழித்து அந்த அமைச்சரின் துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டு ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஒதுக்கப்பட்டது. இதன் பிறகு அமைச்சர் பொன்முடியோ ஒரு விழாவில் திமுக அரசின் சாதனைகளை பேசும் போது மகளிருக்கு இலவச பயணத் திட்டத்தை குறிப்பிட்டார். அப்போது அந்த திட்டத்தை பெயரை சொல்லாமல் ஓசில பயணம் என சொல்லியதால் இந்த வார்த்தை பெரும் விவாதக்குள்ளானது.

திமுக பொதுக் குழு

திமுக பொதுக் குழு

இது போன்று அமைச்சர்கள் அடுத்தடுத்து விமர்சனத்திற்குள்ளானதால் திமுக பொதுக் குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விடிந்தால் யார் எந்த பிரச்சினையை கிளப்புவார்களோ என இருக்கிறது. இதனால் இரவு தூக்கம் கூட வருவதில்லை என கவலை தெரிவித்திருந்தார். இதன் பிறகும் அமைச்சர்கள் இது போன்று பேசுவது தொடர்ந்தன.

திமுக நிர்வாகிகள்

திமுக நிர்வாகிகள்

திமுக நிர்வாகிகள் பாஜக நடிகைகளை அவதூறாக பேசியது, கனிமொழி எம்பி கலந்து கொண்ட நிகழ்வில் பெண் போலீஸாரிடம் தவறாக நடந்து கொண்டது போன்றவை நடப்பது தொடர்கதையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது அமைச்சர் ஆவடி நாசர் கல் எறிந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+