அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: கனிமொழியை வம்பிழுக்க போட்ட ட்வீட்.. இப்போ சிக்கலில் காயத்ரி ரகுராம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற 100வது நாளில் 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்கிற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அதே நாளில், அனைத்து சாதிகளையும் சேர்ந்த 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திராவிட இயக்கத்தின் பல ஆண்டு கனவு இது என்பதால், பல தரப்பிலிருந்தும் தமிழக அரசுக்கு பாராட்டுகள் வந்தன.
அதேநேரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தால் ஏற்கனவே அர்ச்சகர்களாக உள்ளவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக சில தகவல்கள் பரவின. ஆனால் இதை சட்டசபையிலேயே முதல்வர் ஸ்டாலின் உறுதியாக மறுத்துவிட்டார். குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோல பொய் செய்திகள் பரப்பப்படுவதாக அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இருப்பினும் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் .. அதிலும் ஒரு சில குறிப்பிட்ட தலைவர்கள்.. தொடர்ச்சியாக இந்த திட்டத்தை எதிர்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு எதிரான நடவடிக்கை என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது.

காயத்திரி ரகுராம் சர்ச்சை
இந்த நிலையில்தான் பாஜகவின் தமிழக கலை, கலாச்சார பிரிவு தலைவரான நடிகை காயத்ரி ரகுராம் ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், திருமதி. கனிமொழி எம்.பிக்கு என் கேள்வி. அய்யா வைகுண்டர் கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியுமா? உங்களால் இதை செய்ய முடியுமா? அய்யா வைகுண்டர் கோவிலில் நாடார்களுக்கு பதிலாக யாராவது முழு மனதுடன் ஒற்றுமையாக வழிபாடு செய்து தங்கள் கடமையை செய்ய முடியுமா? கோவில் அறக்கட்டளையை வேறு யாருக்காவது கொடுப்பீர்களா? அய்யா வைகுண்டர் சமத்துவத்தை போதித்தார், நான் அவரை நம்புகிறேன் & வணங்கி வருகிறேன். அய்யா வைகுண்டர் கோவில் மற்றும் அறக்கட்டளை நாடார்களுக்கு மட்டுமே. பல மக்கள் மற்றும் அனைத்து சாதியினரும் அய்யா வைகுண்டரிடம் செல்கின்றனர். அய்யா வைகுண்டர் கோவில் பல ஏழை இந்துக்களுக்கு உணவளிக்கிறது. நாடார் சமூகத்தை அழகாக மேம்படுத்துகிறது. அது அழகானது, அதுதான் இந்து மதம். தயவுசெய்து இந்து பாரம்பரியத்தையும் பழக்கவழக்கங்களையும் கெடுக்காதீர்கள். #DMKFails. Today us tomorrow it's you. இவ்வாறு கனிமொழியின் டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பினார்.

அய்யா வைகுண்டர் கோவில்
அய்யா வைகுண்டர் பதி என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் , சாமிதோப்பு ஊரில் அமைந்து இருக்கிறது. மேல் சாதியினராக இருந்தவர்கள் நாடார் இன மக்களை ஒடுக்கியதைக் கண்டு வெகுண்டெழுந்த முத்துக்குட்டி சுவாமி எனும் முடிசூடும் பெருமாள், நாடார் மக்களை ஓரணியில் திரட்டி அவர்களுக்கு ஆன்மீக போதனைகள் செய்தார். தலையில் தலைப்பாகை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார். இதன் மூலம், மன்னருக்கு நிகராக நாங்களும் தலையில் முடி சூடும் உரிமையை பெற்றவர்கள்தான், யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது என்று பிரகடனப்படுத்தினார். நாராயணர் பற்றிய அவரது பாடல்கள் அகிலத்திரட்டு அம்மானை என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. அய்யா வழியை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் நாடார் சாதியினராக இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கனிமொழிக்கு கேள்வி எழுப்புகிறேன் என்ற பெயரில் சிக்கலை தேடிக்கொண்டார் காயத்ரி ரகுராம். ஏனென்றால் சமூக வலைத்தளங்களில் நாடார் சமுதாயத்தை சேர்ந்த பலரும் காயத்ரி ரகுராமின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னூட்டம் செய்துள்ளனர்.

காயத்திரி ரகுராமுக்கு கேள்விகள்
அய்யா பதி என்பது வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது, அவர் உருவாக்கியது, ஆனால் கோவில்கள் என்பது பொதுச் சொத்து என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், உங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நடத்தக்கூடிய மடங்களின் மடாதிபதிகளாக பிற ஜாதியினரை ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாரா என்று காயத்ரி ரகுராமுக்கு பதில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
Recommended Video

பாஜக ஆதரவு ஓட்டுக்கள்
கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாடார் சமுதாயத்தின் மத்தியில், குறிப்பாக இந்து சமூகத்தைச் சேர்ந்த நாடார்கள் மத்தியில் பாஜகவிற்கு கணிசமாக செல்வாக்கு இருக்கிறது. நாகர்கோவில், திருநெல்வேலி போன்ற தொகுதிகளில் இந்த சட்டசபை தேர்தலின்போது பாஜக உறுப்பினர்கள் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியிருக்கிறார்கள். கடந்த லோக்சபா தேர்தலில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் 2 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளை பெற்றார். இப்படியான சூழ்நிலையில்தான் காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பதிவு நாடார் சமுதாய மக்களை புண்படுத்துவது போல் அமைந்துவிட்டதால் இப்போது அந்த பதிவு அவருக்கும், கட்சிக்கும் சிக்கலாகி விட்டது. இதுபற்றி யாரேனும் அவரது கவனத்துக்கு கொண்டு சென்றார்களோ என்னவோ தெரியவில்லை திடீரென இன்று, அய்யா வழி பதியில், காயத்ரி ரகுராம் சென்று வழிபாடு செய்ததையும், அங்கு அவருக்கு திருநாமம் இடப்பட்டதையும் புகைப்படமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளார் காயத்ரி ரகுராம். "அய்யா உண்டு" என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார். அய்யா உண்டு என்பது, அய்யா வழியை பின்பற்றுவோர் அவ்வப்போது சொல்லும் வழிபாடு வார்த்தையாகும்.

சமாளிக்கும் காயத்ரி ரகுராம்
காயத்திரி ரகுராம், எதையோ செய்யப்போய்.. இப்போது அவருக்கும் அவர் கட்சிக்கும் இருக்கும் ஆதரவு தளத்தை அசைத்துப் பார்த்துவிட்டது அந்த ட்வீட் என்று சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எனவேதான் அதை சமாளிப்பதற்காக இப்போது அய்யா வழியை பின்பற்றுவோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் அடுத்தடுத்து ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார் காயத்ரி ரகுராம் என்கிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications