“முட்டாள்தனம்”.. கூட்டணியில் இருந்துகொண்டே இந்த வேலையை செய்யலாமா? பாஜக மீது தமிழ்மகன் உசேன் காட்டம்!
அதிமுக மீதான பாஜகவின் சமீபத்திய விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழ்மகன் உசேன் பாஜகவினரை சாடியுள்ளார்.
சென்னை : கூட்டணியில் இருந்துகொண்டு பாஜகவினர் அதிமுகவை விமர்சிப்பது முட்டாள்தனமான செயல் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினரை அதிமுகவிற்குள் இழுக்க எடப்பாடி பழனிசாமி தனி குழு அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குழு பாஜகவில் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் கூறப்படுகிறது.

உரசல்
கடந்த சில மாதங்களாகவே அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக எம்.பி சிவி சண்முகம் பாஜக கூட்டணி குறித்துப் பேசியது இரு கட்சிகளிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இரு கட்சிகளின் நிர்வாகிகளும் மாற்றி மாற்றி விமர்சித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும், அதிமுக - பாஜக இடையேயான உரசல் வெளிப்பட்டது.

மோதல் உச்சகட்டம்
இந்நிலையில் தான் சமீபத்தில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராகப் பதவி வகித்த சிடிஆர்.நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி.விங் நிர்வாகிகள் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக, அதிமுக இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

புகைச்சல்
இதனால் கடும் கோபமடைந்த அண்ணாமலை, எந்த வினைக்கும் எதிர்வினை உண்டு என்று காட்டமாகப் பேசியிருந்தார். பாஜகவினர், எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதும் கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பாஜகவுக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளனர். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து ஈபிஎஸ், தனது அணி நிர்வாகிகளோடு தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பாஜக செயல் முட்டாள்தனமானது
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், "பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தது முட்டாள்தனமான செயல். நிர்வாகிகள் கட்சி மாறி வேறு கட்சியில் இணைவது இயல்பு தான். அதில் எந்த தவறுமில்லை. அதிமுக பாஜக இடையே எந்த பிரச்சனையும் இல்லை. கூட்டணிக் கட்சியாக இருந்துக்கொண்டு கடுமையாக பாஜகவினர் சிலர் விமர்சிப்பது சரியில்ல, முட்டாள்தனமானது" எனச் சாடியுள்ளார்.
-
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications