"பார்க்க முடியாதுங்க".. மோசடி வழக்கில் கைதான கார்த்திக்.. திரண்ட பாஜகவினர்! திருப்பி அனுப்பிய போலீஸ்
சென்னை: சென்னை குற்றப்பிரிவு போலீசார் மூலம் கைது செய்யப்பட்ட இளைய பாரதம் யூடியூப் சேனலை நடத்திவரும் கார்த்திக் கோபிநாத் என்பவரை பாஜகவினர் சந்திக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
இளைய பாரதம் என்ற யூடியூப் சேனலை கார்த்திக் கோபிநாத் என்பவர் நடத்தி வருகிறார். பாஜக ஆதரவு கருத்துக்கள் கொண்ட வீடியோக்களை இவர் இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.
தீவிர இந்து வலதுசாரி கொள்கை கொண்ட கருத்துக்களை இவர் இணையத்தில் வெளியிட்டு வந்தார். அதோடு இவர் பாஜக நிர்வாகிகள் பலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் கூட இணையத்தில் வெளியாகின .

புகார் என்ன?
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக இவர் மீது புகார் உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது.

என்ன கோவில்
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த சிறுவாச்சூர் திருக்கோயில் சமீபத்தில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என்று கூறி 34 லட்ச ரூபாய் வரை பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக அந்த கோயில் செயலாளர் அரவிந்தன் என்பவர், கார்த்திக் கோபிநாத் மீது புகார் அளித்தார்.

கார்த்திக் கோபிநாத்
இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே கோபிநாத்திற்கு எதிராக நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து கார்த்திக் கோபிநாத்தை ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், மற்றும் உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் கைது செய்தனர். கார்த்திக் கோபிநாத் மீது 406, 420 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.

போலீசார் தடுத்தனர்
இந்த நிலையில் இன்று கோர்ட்டுக்கு ஆஜர்படுத்த கார்த்திக் கோபிநாத்தை கொண்டு சென்ற போது பாஜகவினர் அவரை சந்திக்க முயன்றனர். தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் வளர்ப்பு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி கமிஷ்னர் அலுவலகத்தில் வைத்து சந்திக்க திரண்டனர். ஆனால் வக்கீல் மட்டுமே அவரிடம் பேச முடியும். கட்சியினர் இப்படி கூட்டமாக வந்ததெல்லாம் பேச முடியாது என்று கூறி, பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சந்திக்க அனுமதி இல்லை
அமர் பிரசாத் ரெட்டியிடம் மட்டும் கார்த்திக் கோபிநாத் 2 நிமிடம் பேசினார். இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி செய்துள்ள ட்விட்டில் நாங்கள் கார்த்திக் கோபிநாத்தை சந்திக்க சென்றோம். ஆவடி கமிஷ்னர் அலுவலகத்தில் அவரை சந்திக்க முயன்ற போது 100க்கும் மேற்பட்ட போலீசார் எங்களை தடுத்து நிறுத்தினர். தூரத்தில் இருந்து கொண்டு, உங்களுடன் துணை நிற்போம் என்று கார்த்திக் கோபிநாத்திற்கு உறுதி அளித்தோம், என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்!












Click it and Unblock the Notifications