Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக இல்லை.. ஆனால் பாஜக வேட்பாளர்கள்.. இருக்கு ஆனா இல்ல..! தமிழ்நாட்டில்தான் இந்த நிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சி மாறி பாஜகவுக்கு வந்தவர்கள், தனிக் கட்சித் தலைவர்களை பாஜக தங்களின் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலை ஒட்டி பாஜக தனது தலைமையில் தமிழ்நாட்டில் தனிக் கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் மும்முனை போட்டி என்பது உறுதியாகி உள்ளது.

BJP candidate but different party

ஆளும் கட்சியான திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும் உள்ள நிலையில், மூன்றாவதாக பாஜக தலைமையில் ஒரு கூட்டணி புதியதாக உருவாகி உள்ளது.

ஆகவே, இந்தத் தேர்தலில் வாக்குகள் பல வகைகளில் சிதறக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. கட்சிகள் பல பிரிந்து போட்டியிடுவதால், சில நூறு வாக்குகள் கூட வெற்றியைத் தீர்மானிப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக நேரடியாக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்காக 20 வேட்பாளர்களை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நயினார் நாகேந்திரன், பின்னர் திருநெல்வேலி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல் தூத்துக்குடி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழிசை செளந்தரராஜன், தென் சென்னை தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

BJP candidate but different party

இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், கூட்டணிக் கட்சித் தலைவர்களை எல்லாம் பாஜக தங்களின் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. அதே போல் பாஜகவின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள பலர் மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவராக ஜான் பாண்டியன் செயல்பட்டு வருகிறார். அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். கூட்டணிக் கட்சித் தலைவரான அவரை பாஜக தங்களின் வேட்பாளராக அறிவித்து, தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளது. இவர் தென்காசி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரான செயல்பட்டு வருகிறார் தேவநாதன் யாதவ். இவர் பல வருடங்களாக பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார்.

BJP candidate but different party

கூட்டணியில் உள்ள இவரை பாஜக தங்களின் வேட்பாளர் பட்டியலுடன் சேர்த்துள்ளது. இவரும் தாமரையில் போட்டியிட உள்ளார். இவர் சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அடுத்து வேலூர் தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட உள்ளார் ஏசி சண்முகம். இவர் புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஆவார். கூட்டணியில் இவர், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்தது ஐஜேகே. அந்தக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அவர் இப்போது பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொகுதியில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் சின்னத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை தாமரை சின்னத்தில் இவர் போட்டியிடுகிறார்.

எப்படி மாற்றுக் கட்சியினரை தங்களின் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளதோ அதேபோலவே மாற்றுக் கட்சியிலிருந்து வந்த பலரை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது அந்தக் கட்சி.

நாகை தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்ஜிஎம் ரமேஷ் போட்டியிடுகிறார். இவர் அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் பேரவைத் துணைத்தலைவராக இருந்தவர். அவர் பாஜகவில் இணைந்த பிறகு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

BJP candidate but different party

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராகக் களம் காண்கிறார் ராதிகா சரத்குமார். இவர் முன்பு சமகவில் இருந்தவர். சமகவை சரத்குமார் சமீபத்தில் தான் பாஜகவில் இணைந்தவர். சரத்குமார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது மனைவி பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதைப் போன்று நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பி.ராமலிங்கம் திமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்தவர். அவர், தனக்குத் தேர்தலில் போட்டியிடும் விருப்பமே இல்லை. கட்சி நிர்ப்பந்தத்தால் நிற்கிறேன் என்று சொல்லி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

திருநெல்வேலி பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து பாஜகவுக்குச் சென்றவர். இவரைப்போலவே சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளரான கார்த்தியாயினி, அதிமுகவிலிருந்து கட்சி மாறி பாஜகவுக்குச் சென்றவர்.

இவர் வேலூர் மேயராக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார். இவரது நடவடிக்கை மிகப்பெரிய அளவில் அன்று சர்ச்சையைக் கிளப்பியது. அதனால் நீதிமன்றம் அவரைக் கண்டித்தது.
தமிழ் மாநிலக் கட்சி எனத் தனிக் கட்சியை நடத்தி வந்த பால் கனகராஜ், தனது கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தவர். அவருக்கு பாஜக தொகுதி ஒதுக்கி உள்ளது. அவர் சென்னை வடக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தாமரை சின்னத்தில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

புதுச்சேரி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நமச்சிவாயம் காங்கிரசிலிருந்து பிஜேபிக்கு வந்தவர். இவர் புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமைச்சராக இருந்து வருகிறார்.

பாஜக கூட்டணியில் உள்ள ஒபிஎஸ் மட்டும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் நிற்க உள்ளார். தமாகா கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் சைக்கிள் சின்னத்தில் நிற்க உள்ளனர்.

இவர்களைத் தவிர மற்ற அனைவரும் பாஜக தாமரையில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+