சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன எனக்கு உரிமை இல்லையா? கொதித்தெழுந்த குஷ்பு.. நேராக கமிஷ்னர் ஆபிசுக்கே போய்.. திமுகவிற்கு செக்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக நிர்வாகிகள் மீது பாஜக வேட்பாளர் குஷ்பு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திமுகவினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாஜக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிடுகிறார். திமுக, காங்கிரசில் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் பாஜகவிற்கு தாவியவருக்கு தற்போது பாஜக தலைமை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்துள்ளது.

ஆயிரம் விளக்கில் கு.க செல்வம் இருந்தாலும் குஷ்புவை பாஜக களமிறக்கி உள்ளது. தற்போது திமுகவிற்கு எதிராக குஷ்பு மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவை தாக்கி பேசி வருகிறார்.

புகார்

புகார்

இந்த நிலையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த போது திடீரென சென்னை கமிஷ்னர் அலுவலகம் சென்ற குஷ்பு அங்கு திமுகவிற்கு எதிராக புகார்களை அடுக்கினார். திமுக நிர்வாகிகள் மீது குஷ்பு கடுமையான புகார்களை வைத்தார். பாஜக நிர்வாகிகள் பலர் குஷ்புவுடன் கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று இருந்தனர் .

கமிஷ்னர் அலுவலகம்

கமிஷ்னர் அலுவலகம்

திமுகவினர் சென்னையில் வன்முறையை மேற்கொள்கிறார்கள். சென்னையில் இருக்கும் தொகுதியில் பல இடங்களில் பாஜகவினரை பிரச்சாரம் செய்ய விடாமல் வன்முறையை மேற்கொள்கிறார்கள். முக்கியமாக துறைமுகம் தொகுதியில் தி.மு.கவினர் வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். இங்கு இருக்கும் சேகர்பாபு வன்முறையை கையாளுகிறார்.

கைது

கைது

இவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று குஷ்பு தரப்பில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதோடு தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேசிய வாக்காளர் பேரவையினரை திமுகவினர் கோடம்பாக்கத்தில் தாக்கி உள்ளனர். இதில் போலீஸ் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விசாரிக்க வேண்டும்

விசாரிக்க வேண்டும்

இந்த தாக்குதல் குறித்தும் கமிஷ்னர் விசாரிக்க வேண்டும் என்று குஷ்பு புகார் அளித்துள்ளார். பாஜகவை பிரச்சாரம் செய்ய விடாமல் திமுகவினர் வன்முறை செய்கிறார்கள். ரவுடிகளை வைத்து பிரச்சாரத்தை நிறுத்த முயல்கிறார்கள் என்று திமுகவிற்கு எதிராக குஷ்பு புகார் கொடுத்துள்ளார்.

புகார்

புகார்

இது தொடர்பாக பேசிய குஷ்பு.. நான் இந்த மண்ணின் பெண்.. எனக்கு இங்கு பிரச்சாரம் செய்ய உரிமை உள்ளது. என்னை யாரும் தடுக்க முடியாது . 35 வருடமாக இங்கே இருக்கிறேன். இங்குதான் என் குடும்பம் இருக்கிறது. நான் கண்டிப்பாக தேர்தலில் நிற்பேன், பிரச்சாரம் செய்வேன் என்று குஷ்பு கூறியுள்ளார்.

English summary
BJP candidate Kushboo Sundar gives a complaint against DMK cadres in commissioner office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X