ராஜ்ய சபா எம்பி பதவி.. ஆந்திர பிரதேசத்தில் அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு.. வேறு வேட்பாளர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு ஆந்திர பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிபோய் உள்ளது.

ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கான இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக போட்டி இடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது..தெலுங்கு தேசம் - பாஜக சார்பாக இதற்கான வேட்பாளர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில், வெங்கட சத்யநாராயணாவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதனால் அண்ணாமலை அங்கிருந்து எம்பி ஆக மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

BJP chief Annamalai is not becoming the Rajya Sabha candidate from Andhra Pradesh NDA

அண்ணாமலை அமைச்சர்

ஏற்கனவே பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆவப்போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. பவர் புல் துறைகளில் ஒன்று அண்ணாமலைக்கு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இப்போது ஆந்திர பிரதேச எம்பி வாய்ப்பு பறிபோய் உள்ளதால் அண்ணாமலை எங்கிருந்து அமைச்சராக போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகா அல்லது மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்ய சபா வழியாக இவர் எம்பி ஆகி அமைச்சர் ஆக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாட்டில் இருந்து இவர் எம்பி ஆக வாய்ப்பு இல்லை. அதற்கு அதிமுக ஆதரவு தேவை. அதனால் அண்ணாமலை தமிழ்நாட்டில் இருந்து அமைச்சராக முடியாது. ஏனென்றால் அதிமுக தயவில் அமைச்சரவை அண்ணாமலை விரும்பமாட்டார் என்று கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் பலத்தை வைத்து 1 எம்பிதான் தேர்வாக முடியும். அந்த ஒரு எம்பி பதவியையும் விட்டுக்கொடுப்பதை அதிமுக விரும்பாது. ஏற்கனவே தேமுதிகவுக்கு வாக்கு கொடுத்த எம்பி பதவியை கூட அதிமுக தரவில்லை. அப்படி இருக்க அண்ணாமலைக்கு அதை கொடுக்க அதிமுகவும் விரும்பாது.

இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து இவர் எம்பி ஆகி.. அமைச்சர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வாரங்களில் மத்திய அமைச்சர் பெரிய அளவில் மாற்றப்பட உள்ளது. மத்திய அமைச்சர்கள் 4-5 பேர் வரை மாற்றப்பட உள்ளனர். அதேபோல் 2-3 பேர் வரை இலாக்கா மாற்றம் பெற உள்ளனர். அடுத்த வருடம் பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான ஜாதி கால்குலேஷன்கள் அடிப்படையில் அமைச்சர் பதவி மாற்றப்பட உள்ளது.

மேற்கு வங்கம் , கேரளா , தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து சிலர் அமைச்சர்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதை மனதில் வைத்தே பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள். பவர் புல் துறைகளில் ஒன்று அண்ணாமலைக்கு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அண்ணாமலைக்கு தேசிய பதவி

தமிழ்நாடு பாஜக பிரிவு தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றதிலும் சரி அல்லது கட்சியின் நிகழ்ச்சிகளை கிராமம் கிராமமாக கொண்டு சென்றதிலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது..

கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்வோம். தேசிய அளவில் அவரை பயன்படுத்திக்கொள்வோம் என்று அமித் ஷா கூறி உள்ளார். இதன் மூலம் தேசிய பணிக்கு அண்ணாமலை செல்வதை அமித் ஷா உறுதி செய்துள்ளார். இந்த நிலையில்தான் அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. இதெல்லாம் இணையத்தில், அரசியல் விமர்சகர்கள் இடையே பரவும் தகவல்கள்தான். இன்னும் உண்மையான அறிவிப்புகள் வரவில்லை.

பத்தோடு பதினொன்றாக ஒரு பதவி

தற்போது வரை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அண்ணாமலையுடன் சேர்த்து வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோருக்கும் கட்சி தலைமை், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பை வழங்கியிருக்கிறது. சசிகலா, புஷ்பா சரத் குமார் போன்றவர்களுக்கும் இதே பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

இது அதிகாரம் மிக்க பதவி எல்லாம் கிடையாது. கவுரவம் மிக்க பதவி. முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டத்திற்கு இவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் இந்த பதவிக்கு தனியாக பொதுக்குழு கூட்டம் தவிர்த்து வேறு பெரிய அதிகாரங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+