முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்.. மாநகராட்சி கூட்டத்தில் ஆச்சர்யம்
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் விவாதத்தின்போது, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், 'சாலை அமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு நான் கோரிக்கை வைத்தேன். கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த முதல்வருக்கு நன்றி' என்று தெரிவித்தார். அதற்கு, துணை மேயர் மகேஷ்குமார் பேசுகையில், பாஜக உறுப்பினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் ஆகஸ்ட் மாதத்துக்கான மாநகராட்சி கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் ஆகஸ்ட் 29ம் தேதி நடந்தது. கூட்டத்துக்கு சென்னை மேயர் பிரியா தலைமை தாங்கினார். சென்னையின் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்து பேசினார்கள். 90வது வார்டு கவுன்சிலர் ராஜகோபால் பேசுகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தமுள்ள 200 வார்டுகளில், 140 வார்டுகளில் நகர்ப்புற நல வாழ்வு மையம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. அப்படி திறக்கப்பட்ட வார்டுகளில், என்னுடைய 90-வது வார்டும் ஒன்று. இங்கு நகர்ப்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த நகர்ப்புற நல வாழ்வு மையம் திறக்கப்படவில்லை என்றார்.
இதற்கு பதில் அளித்து மேயர் பிரியா பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியில் 140 வார்டுகளில் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை திறந்து வைத்தார். மீதமுள்ள 60 வார்டுகளில்தான் 90-வது வார்டு இருக்கிறது. நகர்ப்புற நல வாழ்வு மையத்துக்கு தேவையான டாக்டர் நியமனம் செய்யப்பட்டு, திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
16வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் பேசும் போது, நத்தம் புறம்போக்கு பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வீட்டு வரி, குடிநீர் வரி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கடந்த ஆண்டுகளில் நத்தம் புறம்போக்கு பகுதியில் வசித்தவர்களிடம் வரி வசூலிக்கப்பட்டது. மீண்டும், நத்தம் புறம்போக்கு பகுதியில் வசிப்பவர்களுக்கு வரி விதிப்பு வேண்டும் என்கிறார்கள் என்றார்.
இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, இது அரசின் கொள்கை முடிவு. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்த பிறகு சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தி.மு.க. கவுன்சிலரும் நிலைக்குழு (கல்வி) தலைவருமான விஸ்வநாதன் குறுக்கிட்டு பேசும் போது, "கடந்த 16 மாதங்களில் மாநகராட்சி கமிஷனர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், இதுவரை தீர்வு காணப்படவில்லை. நத்தம் புறம்போக்கு நிலத்துக்கு வரி விதிப்பு என்பது காலம் காலமாக இருந்து வந்த ஒன்றுதான். பொது மக்களிடம் 'ரெட் பார்ம்' பெறப்பட்டு வரி விதிப்பு முறை அமலில்தான் இருந்தது. இந்த வரி விதிப்பு முறை இல்லாததால் 3 லட்சம் பொது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்.
இந்த கோரிக்கைக்கு துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் நிலைக்குழு (கணக்கு) தலைவர் தனசேகரன் ஆகியோரும் ஆதரவாக பேசினார்கள். அப்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பேசுகையில், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு வரி விதிப்பு வேண்டும் என்று கேட்கிறீர்கள். அங்கு ரெட்பார்ம் நடைமுறை கூடாது என்று தமிழக அரசிடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது. தற்போது கோரிக்கை எழுந்துள்ளதால், மீண்டும் அரசிடம் விளக்கம் கேட்டு ஒரு வாரத்தில் கடிதம் அனுப்ப உள்ளோம். தமிழக அரசு அனுமதி கொடுத்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசும் போது, தனது வார்டுகளில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கிறார், சில நாடுகளைத் தவிர பிரெஞ்சு மொழி பேசுவதில்லை . நாட்டின் பிற பகுதிகளிலும் மாணவர்கள் தொடர்பு கொள்ளவும், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கும் உதவும் என்பதால் சென்னை மாநகராட்சி ஏன் ஹிந்தியைக் கற்பிக்க முடியாது என்றும் கேட்டார்.
இதற்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பதில் அளித்து பேசுகையில், ஸ்கில் டெவலப்மெண்ட் முக்கியம், தமிழ் முக்கியம், ஆங்கிலம் முக்கியம், பிரெஞ்சு மொழியை கூடுதலாக கற்பிக்கிறோம். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கிறோம். பிரெஞ்சு மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் மாணவர்களிடம் திணிக்கவில்லை.. எந்த குழந்தைகள் விருப்படுகிறார்களோ, அவர்களுக்கு நாங்கள் கற்றுத்தருகிறோம்.
ஆங்கிலத்தை பொறுத்தவரை தினமும் பள்ளி ஃபிரேயரில் நாங்கள் ஆங்கில வார்த்தை அர்த்தத்துடன் தினமும் சொல்லிக்கொடுக்க வலியுறுத்தியுள்ளோம். அந்த வார்த்தையை வைத்து ஒரு புதிய வரிகளையும் உருவாக்கி தர சொல்லியிருக்கிறோம். அதுபடி நடக்கிறது. அதேபோல் பள்ளி வகுப்பறையில் தினமும் ஆங்கில நியூஸ் பேப்பரை கொடுத்து உச்சரிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிவற்றை செய்து வருகிறோம். அதேபோல் ஆங்கில வகுப்பின் போது, 10 நிமிடம் ஒவ்வொரு குழந்தையையும் ஆங்கிலத்தில் உரையாட வைக்கிறோம். இவை எல்லாம் சென்னை மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட உமா ஆனந்தன், ஆனாலும் அதுபோதுமானதாக இல்லை.. அதை சிலபஸ் ஆகவும், சப்ஜெக்டாகவும் எடுக்க வேண்டும்.. உயர்கல்விக்கு செல்ல மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேநேரம் நீங்கள் சொல்வது போல் குழந்தைகள் படிப்பதை நான் கேட்ட போது உச்சரிப்பு, சரியாக இல்லை என்றார்.
இதற்கு பதில் அளித்து மாநகராட்சி மேயர் பிரியா பேசுகையில், மழலையர் பள்ளி முதலே மாணவர்களுக்கு தேவையான திறன் மேம்பாடு பயிற்சியும், ஆங்கிலத்தில் பேசுவது தொடர்பாக சரியான உச்சரிப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது . ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் சொல்லித்தரப்படுகிறது. உச்சரிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபடும். ரஷ்யாவில் உச்சரிப்பு ஒரு மாதிரி இருக்கும். அமெரிக்காவில் உச்சரிப்பு ஒரு மாதிரி இருக்கும். இந்தியாவில் ஒரு மாதிரி இருக்கும்.. நாம் அமெரிக்காவில் உள்ளது போல் இங்லீஸ் பேச வேண்டும் என்று முயற்சிக்க முடியாது. அதேபோல் ஆங்கிலத்தில் நாம் பேசுவது அவர்களுக்கு புரிகிறதா, அதை நம்மிடம் திரும்பவும் ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறார்களா.. என்பதை உறுதி செய்யும் தரமான கல்வியை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது.. நம் நாட்டில் ஒரு உச்சரிப்பு உள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளின் ஆங்கில மொழி உச்சரிப்புகளில் மாணவர்களை பேச வைக்க முடியாது" இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.
முன்னதாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் விவாதத்தின்போது, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், 'சாலை அமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு நான் கோரிக்கை வைத்தேன். கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த முதல்வருக்கு நன்றி' என்று தெரிவித்தார். அதற்கு, துணை மேயர் மகேஷ்குமார் பேசுகையில், பாஜக உறுப்பினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். அதைதொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்களும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications