அதிமுக பிளவால் பாஜக பயனடையுதா? நோ சான்ஸ் -எடப்பாடியின் காலில் விழுந்த பின் மாஃபா பாண்டியராஜன் பேட்டி
சென்னை: அதிமுகவின் பிளவால் பாஜக பயனடையவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமைக்கு தகுதியானவர் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்து இருக்கிறார்.
அதிமுக உட்கட்சிப்பூசல் பூதாகரமாகி இருக்கும் நிலையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் தர்மயுத்தத்தின்போது ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தவருமான மாஃபா பாண்டியராஜன் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
இ.பி.எஸுக்கு பூங்கொடுத்து கொடுத்து தனது ஆதரவை தெரிவித்த மாஃபா பாண்டியராஜன் காலில் விழுந்து ஆசிபெற்றார்.

அம்மாவின் ஆன்மா
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கட்சி மீண்டும் எழுந்து செல்ல வேண்டும் என்றால் எது நல்லது என்பதை உணர்ந்து அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் செய்வார். கண்டிப்பாக இபிஎஸ்-இன் தலைமையை ஏற்று இந்த பாதைக்கு வருவார் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். அம்மாவின் ஆன்மா இந்த கட்சியை பிரியவிடாது. ஜெயலலிதா, எம்ஜிஆரின் ஆன்மா இந்த கட்சிக்கு என்றும் துணை நிற்கும். எனவே இந்த கட்சிக்கு பிளவு என்பதே ஏற்படாது என்று நம்புகிறேன்.

இபிஎஸ் தலைமையை ஏற்பார்கள்
தர்மயுத்தம் நடந்தாலும் கூட கட்சி பிளவுபடக்கூடாது என்பதற்காக ஒன்றாக சேர்ந்தார்களோ அதேபோல் இம்முறையும் இணைவார்கள். கட்சி என்பது அனைத்துக்கும் மேல் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே இபிஎஸ் தலைமையை ஏற்று வருவார்கள். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதைபோல் மாற்றுக்கட்சிக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. அந்த நிலை மாறும்." என்றார்.

பாஜகவுக்கு கொண்டாட்டமில்லை
அப்போது செய்தியாளர் ஒருவர் மாற்றுக் கட்சி என்றால் பாஜகவை சொல்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாண்டியராஜன், "கண்டிப்பா நான் பாஜவை சொல்லவில்லை. இந்த பிளவால் பாஜக பயனடையவில்லை. இந்த பிளவால் பயனடைந்தது திமுக. அவர்கள் கொண்டாடாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரே குடையின் கீழ் அனைவரும் வர வேண்டும். இதனால் எனக்கு எந்த பயனும் இல்லை. மனசாட்சிக்கு சரி என்று தோன்றியதை செய்கிறேன்.

தர்மயுத்தமும் சரிதான்
தர்மயுத்த நேரத்திலும் என் மனசாட்சிக்கு சரி என்று பட்டதை செய்தேன். தர்மயுத்தம் தவறான விசயம் இல்லை. அதற்கு எல்லா பங்களிப்பையும் நான் கொடுத்தேன். ஆனால், தற்போதைய சூழலில் கட்சி ஒருவரின் கீழ் செயல்பட வேண்டிய நிலை தேவைப்படுகிறது. ஏனென்றால் அனைத்து முடிவுகளையும் எடுக்க தாமதமாகிறது. அச்சத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை தொடர்கிறது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை காண்பதற்கான எழுச்சியை நான் காண்கிறேன்.

தொண்டர்களின் நிலைபாடு
தொண்டர்களின் நிலைபாட்டை பிரதிபலிக்க வேண்டும் என்பதால் நான் ஒற்றைத் தலைமையை ஆதரிக்கிறேன். ஒற்றைத் தலைமைக்கு வாய்ப்பு இருக்கக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று நினைக்கிறேன். ஜெயலலிதா 2016 தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றதைபோன்ற நிலையை கொண்டு வர வேண்டுமென்றால் இபிஎஸின் ஒரே தலைமையில் கீழ் கட்சி வர வேண்டும்.

அதிசயம் நடக்கும்
அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், அண்ணன் வைத்திலிங்கம் ஆகியோர் மீது மிகப்பெரிய மரியாதையை நான் வைத்திருக்கிறேன். ஒரு தலைமை இல்லாததால்தான் தொடர் தோல்வியை சந்திக்கிறோம். யாரும் பிடிவாதமாக இல்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஒத்த கருத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். 23 ஆம் தேதிக்கு முன்பாக அதிசயம் நிகழும். ஆச்சரியம் நிகழும். இருதரப்பு என்ற நிலை மாறி அனைவருமே அம்மா தரப்பு என்ற நிலைக்கு வருவார் என்று நான் நம்புகிறேன்.
-
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்!












Click it and Unblock the Notifications