கலங்கி நிற்கும் தாமரை.. மோடி பிரதமராவதில் சிக்கல்?அமைச்சரவை ஒதுக்கீட்டில் விஸ்வரூபம் எடுத்த மோதல்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பாஜக பெரிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிற்கு கொடுக்க மறுத்து வருகிறதாம்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.

இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். இனிமேல் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைமை பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.
பாஜக மெஜாரிட்டி இல்லை: 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
சந்திரபாபு நாயுடு - நிதிஷ் கிங்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.
என்ன கோரிக்கை; சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் பாஜக ஆட்சிக்கு ஆதரவு தருகிறோம், மோடி ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறோம் என்று கூறிவிட்டனர். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நாள் இன்னும் குறிக்கப்படவில்லை.
நாயுடு கோரிக்கை; இப்படிப்பட்ட நிலையில்தான் நிதிஷ் மற்றும் நாயுடு பாஜகவிடம் சில கோரிக்கைகளை வைத்துவிட்டாராம்.
அதில் உள்துறை மற்றும் பாதுகாப்பு துறையை நாயுடு கேட்டுள்ளார். அதோடு துணை பிரதமர் பதவி வேண்டும். மேலும் ரயில்வே அல்லது சாலை போக்குவரத்து துறையில் ஒன்று வேண்டும் என்று கேட்க எல்ஜே பி பாஸ்வான் ஆலோசனை செய்துள்ளாராம்.
இது போக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் துணை பிரதமர் + நிதி துறையை வேண்டும் என்று கேட்க முடிவு செய்துள்ளதாம். 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பாஜக பெரிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிற்கு கொடுக்க மறுத்து வருகிறதாம்.
பெரிய துறைகளை நாங்களே வைத்துக்கொள்வோம். அதை உங்களுக்கு கொடுத்தால் ஆட்சியை சுமுகமாக செய்ய முடியாது. திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்று பாஜக பிடிவாதம் பிடிப்பதால் மோதல் ஏற்பட்டு உள்ளதாம்.
என்ன நடந்தாலும் பாஜகவிற்கு இனி வெற்றிகரமான நாட்கள் இல்லை .. அதனால்தான் மோடியும் நேற்று முகம் வாடி இருந்தார். இதை உணர்ந்தே பாஜகவும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உடைந்து போய் இருக்கிறது.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications