செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கு.. கையில் எடுத்த பாஜக.. ஆளுநருடன் சந்திப்பு.. என்ன நடக்கும்?
சென்னை: பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கு தொடர்பான அனைவருக்கும் புதிய சிக்கல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன முடிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பும் இன்னொரு பக்கம் எழுந்துள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications