மதிவதனி மீது பாயும் வழக்கு? ஆர்எஸ்எஸ் குறித்த பேச்சால் சென்னை காவல் ஆணையரகத்துக்கு ஓடிய பாஜக
சென்னை: ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசியதாக திராவிடர் கழகத்தின் நிர்வாகி மதிவதனி மீது பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் அளித்துள்ளார்.
திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பாஜகவை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் மதிவதனி தொடர்ச்சியாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸை விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் மதிவதனி பேச்சை மேடையிலேயே இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்தார். தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று மதிவதனியை கண்டித்தார். இது கடும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் தான் மதிவதனி மீது பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் மிகப் பெரிய தன்னார்வலர்கள் அமைப்பான ஆர்எஸ்எஸ் பற்றி திராவிட கழக நிர்வாகி மதிவதனி என்பவர் அவதூறாக பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேர்ந்தது.
தமிழிசையிடம் வருந்திய திருமாவளவன்.. முடிவுக்கு வரும் தலைவர்களின் பரபரப்பான மோதல்! என்ன நடந்தது?
அதில் பள்ளி கல்லூரிகள் இருக்கும் இடத்தில் போதைப்பொருள் அதிகமாக விற்கப்படுகிறது. இது ஆர்எஸ்எஸ் உடைய வெளிப்படையான திட்டம். ஏன் தன்னுடைய சொந்த மக்களை போதைக்கு அடிமைப்படுத்த சொல்கிறார்கள்? ஏனென்றால் போதைக்கு அடிமையானால் பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்.
வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன் மூலம் அவர்களை தூண்டி, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், உண்மைக்குப் புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே மதிவதனி பரப்பி இருக்கிறார்.
துணை முதல்வரானதும் உதயநிதியின் முதல் கையெழுத்து எது தெரியுமா? முதல் பந்திலேயே சிக்ஸர்.. என்ன அது?
மேலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையில், பெண்களின் மாண்பை குலைக்கும் விதத்திலும் அவரது பேச்சு அமைந்துள்ளது. எனவே, மதிவதனி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த புகாரால் மதிவதனிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications