Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயிலில் காஜா பீடி 300 ரூபாய் சார்.. முதல்வர் ஸ்டாலினின் நேரடி எதிரி நான்..பாஜக அமர் பிரசாத் ரெட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் நேரடி எதிரி நான் என்கிறார் தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி.

தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு பிரிவின் 'மாநில தலைவர்’ அமர் பிரசாத் ரெட்டி. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர், பேராசிரியர் என தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பவர்.

BJP Functionary Amar Prasad Reddy Complaints about Chennai Puzhal Prison

அண்மையில் சென்னை அருகே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு முன்பாக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் அமர் பிரசாத் ரெட்டி. இதனைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் மீது அடுத்தடுத்த வழக்குகள் பாய்ந்தன. இதனால் குண்டர் சட்டமும் அமர் பிரசாத் ரெட்டி மீது பாயக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் குண்டர் சட்டம் போடுவதற்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அப்போது அரசு தரப்பில் குண்டர் சட்டம் போடவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் சென்னை புழல் சிறையில், கழிப்பறை வசதி இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களுடன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார் அமர் பிரசாத் ரெட்டி. இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனிடையே சென்னையில் இன்று அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னுடைய அரெஸ்ட் குறித்து முதல்வர் ஸ்டாலின், உதயநிதிடம் பிரஸ்தான் கேள்வி கேட்கனும். என் மீது பொய் வழக்கு எல்லாம் போட்டு, புழல் சிறையில் இருந்து 5 பஸ்ஸில் அம்பாசமுத்திரம் கூட்டிட்டு போய்... பாஜக தொண்டன் இதற்கு எல்லாம் எங்கேயும் கலங்கமாட்டான்.

ஆர்.எஸ்.எஸ். முகாம் மாதிரி: எங்களுடைய பாஜக டிரெயினிங் புரோகிராமும் ஜெயிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரிதான் எங்களுக்கு டிரெயினிங்கே கொடுப்பாங்க. அப்படிதான் நாங்கள் வாழ்வோம். ஆர்.எஸ்.எஸ்.-ல் முதல் ஆண்டு முகாமாகட்டும் எல்லாமே இந்த அடிப்படையில்தான் வரும். சிறையை பார்த்து தயங்குகிற ஆட்கள் நாங்கள் இல்லை.

கருக்கா வினோத்துக்கு ஒரு நீதி எனக்கு?: இதெல்லாம் ஒரு கேஸா? இதெல்லாம் போட்டு பாஜகவை நிறுத்திட முடியுமா? பாஜக தலைவர்களை நிறுத்திட முடியுமா? தோல்வி பயம் வந்துவிட்டது திமுக. வெளிப்படையாகவே திமுக காட்டுகிறது. எதிர்த்து நிற்கிற அத்தனை பேரையும் பொய் வழக்கு போட்டு கைது செய்யுறாங்க. எதாவது உங்ககிட்ட எவிடென்ஸ் இருக்கான்னு? கருக்கா வினோத் விவகாரத்தில் ஆதாரங்களை காட்டுறீங்க.. எனக்கு எதிரான ஆதாரங்கள் எங்கேன்னு கேட்கிறேன்.

மிரட்டுறாங்க சார்.. : இந்த வழக்குகளை கண்டு நாங்கள் பின்வாங்கி ஓடிவிடப் போகிறோமா? இது நீதிமன்ற நடைமுறைகள். உள்ளே, துப்பாக்கியால் சுட்டு பிடித்த ஒரு நபரை என் பக்கத்தில் படுத்து வைத்து மிரட்டுறாங்க. தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு கொண்டு போவேன். அந்த ஆணையத்தை சென்னை புழல் மத்திய சிறைக்கு கொண்டுவந்தே தீருவேன்.

ஸ்டாலின் நேரடி எதிரி நான்: எனக்கு சில விஷயங்கள் தெரியாம இருந்துச்சு.. நான் சாஃப்ட் பாலிட்டிக்ஸ் செய்துகிட்டு இருந்தேன். அதில் இருந்து வெளியே கொண்டு வந்து, நேரடியாக நான்தான் அவருடைய எதிரின்ற மாதிரி எல்லாம் கொண்டு வந்து நிப்பாட்டிட்டாரு.. ரேஷன் அரிசியே 25% மட்டும்தான் வருது.. காலையில டீன்னு ஒன்னு போடுவாங்க.. டீ கண்டுபிடிச்சவன் எங்கேயாவது போய் குதிச்சுடுவான்.

காஜா பீடி விலை ரூ300: வெளியில ஒரு கட்டு காஜா பீடி ரூ30. ஆனால் ஜெயிலில் ஒரு கட்டு காஜா பீடி ரூ300 சார்.. இதை எப்படி ஒத்துக்கொள்வீர்கள்? ஒவ்வொரு ரூமிலும் நாய்க மாதிரி, எருமைமாடுக மாதிரி உள்ள தூக்கி போட்டு 50,60ன்னு அடைச்சீங்கன்னா எப்படி முடியும்? எவ்வளவு இன்ஃபெக்சன் உள்ள வரும்? இவ்வாறு அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+