காவி கொடியுடன்.. காஸ்ட்லி காரில் வந்திறங்கிய பாஜக காந்தி.. அதிரடியாக வைரலாகும் போட்டோ!
காஸ்ட்லி காரில் வந்திறங்கினார் பாஜக எம்எல்ஏ காந்தி
சென்னை: காவி கொடியை பறக்கவிட்டபடியே, காஸ்ட்லி காரில் வந்திறங்கிய பாஜகவின் காந்தியின் போட்டோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இந்த முறை தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்ஆர் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.. இன்றைய பதவி ஏற்பு விழாவில் காந்தி ஒரு காஸ்ட்லி காரில் வந்திறங்கியதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
கருப்பு கலர் சொகுசு காரில் பாஜகவின் கொடியை பறக்கவிட்டபடியே, இன்று பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்திறங்கினார்.. அப்போதுதான் அனைவரும் அந்த காரையே வியந்து பார்த்தனர்.

காந்தி
இதற்கு காரணம், அமைச்சர் கனவில் இருந்த திமுகவின் சுரேஷ்ராஜனை தோற்கடித்துதான், காந்தி இந்த வெற்றியை பெற்றுள்ளார்.. காந்தியை பொறுத்தவரை அந்த அளவுக்கு பண பலமோ, அதிகார பலமோ கொண்டவர் கிடையாது.. ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்காகவும், பாஜக பணிகளுக்காகவும் கல்யாணம்கூட செய்து கொள்ளாதவர்..

வீடு
இப்போதுவரை கட்சி பணியை ஆற்றி வருபவர்.. இவருக்கென்று சொந்தமாக வீடு கூட இல்லை.. அதுமட்டுமல்ல, காலில் செருப்புகூட போட மாட்டார்.. ஒரு வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா இதுதான் அவர் டிரஸ்.. இப்படியேதான், சொந்த மாவட்டத்தில் வலம் வருவார். அந்த அளவுக்கு எளிமையானவர்.. இத்தனைக்கும் இவர் பொன்.ராதாவைவிட சீனியர்..

சீனியர்
ஆனால், ஓயாத கட்சி, மூத்த தலைவர் என்ற அனுதாப அலை போன்றவையே காந்தி வெற்றி பெற பெரும் காரணமாக இருந்தது. இப்படிப்பட்டவர் ஒரு காஸ்ட்லி வந்திறங்கியதுதான் அனைவருக்கும் வியப்பை தந்துள்ளது.. காஸ்ட்லி காரில் வந்து காந்தி இறங்கிய போட்டோவும் அவரது ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.. இதை பார்த்ததும் ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர்..

கம்பீரம்
"கம்பீரமாக காவி கொடி பறக்க நாகர்கோவில் மக்கள் பிரதிநிதி.. பார்க்கவே பெருமிதம் ஐயா.. எல்லாம் வல்ல ஈசன் அருளால் சட்டமன்றம் காவிகள் வசம் வரும் நாள் எதிர்பார்த்து" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னொருவரோ, "வணக்கங்களுடன் வாழ்த்துக்கள் அய்யா, கலக்குங்க.. சட்டமன்றத்தை உங்கள் விவாதங்களால்,இதுநாள் வரை உங்களை தேர்ந்தெடுக்காத மக்கள், வெட்கி தலை குனியும்படி பல நலத்திட்டங்களை நாகர்கோவிலுக்கு கொண்டு வாங்க, வந்தே மாதரம்" என்றும் வாழ்த்து சொல்லி உள்ளனர்.

சந்தேகம்
ஆனால் ஒருத்தர் மட்டும், "ஐயா இந்த கார் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கும் என தோன்றவில்லை. இப்படியான பதிவுகள் உங்களை தவறாக எண்ண வைக்கும். Admin pl think." என்று அந்த காரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.. அப்படி என்றால், இந்த கார் யாருடையது என்பதுதான் அனைவருக்குமான ஒரே சந்தேகம்..!
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications