"நாடார்களை" கையில் எடுத்த காயத்ரி.. "திமுகவை என்னன்னு பாருங்க".. மீண்டும் சீண்டி பரபரப்பு பேட்டி
நாடார்கள் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று காயத்ரி தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழக பாஜகவின் காயத்ரி ரகுராம் தந்துள்ள பேட்டி ஒன்று, அரசியல் களத்தில் சுலசலப்பை கூட்டி வருகிறது.. அத்துடன் நாடார் சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
சென்னையை அடுத்த ஆவடி நகராட்சி, இப்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, பழைய நகராட்சி கட்டிடம் இடிக்கப்பட்டு, அங்கு புதிய மாநகராட்சி கட்டிடம் சமீபத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நகராட்சியாக ஆவடி இருந்தபோது, அதன் அலுவலகக் கட்டிடம் பெருந்தலைவர் காமராஜரின் பெயரில்தான் செயல்பட்டது...

நாடார்கள்
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்ட பிறகு, இதுநாள் வரை பெயர் எதுவும் வைக்கவில்லை... அதனால், ஆவடி மாநகராட்சி கட்டடத்துக்குக் காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டுமென்று கோரிக்கையாக இருந்து வருகிறது... குறிப்பாக, பழைய நகராட்சி கட்டிடத்துக்கு காமராஜர் பெயர் இருந்ததுபோலவே, இப்போதும் புதிய கட்டிடத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள்கள் எழுந்துள்ளன.

காயத்ரி ரகுராம்
இந்த விஷயத்தை தமிழகம் கையில் எடுத்துள்ளது.. தமிழக பாஜக கலை -கலாசார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் இதுகுறித்து ஏற்கனவே 2 முறை ட்விட்டரில் வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.. அவர் பேசும்போது, "ஆவடி எனும் நகரை நிர்மாணித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர்... அவரை கவுரவிக்கும் விதத்தில், ஆவடி நகராட்சி அலுவலக வளாகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

நாடார் - காமராஜர்
ஆனால் புதிய மாநகராட்சி அலுவலக கட்டட வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழகத்தை ஆளும் திமுக அரசு மௌனமாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி என்று சொல்லிக் கொண்டு, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்து கொண்டதாக தெரியவில்லை... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாடார் ஓட்டுக்களை பெறுவதற்காகவாவது, தமிழக அரசை, காங்கிரசார் வற்புறுத்துவர் என்று பார்த்தால், அவர்கள் ஒதுங்கியே இருக்கின்றனர்.

நாடார்கள் பாடம்
காமராஜர் பெயர் விஷயத்தில் அலட்சிய மனப்பான்மையோடு செயல்பட்டுவரும் திமுக, காங்கிரஸுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாடார் சமூக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இல்லையெனில் காமராஜர் பெயருக்காக தமிழக பாஜக போராடும்" என்றார். காமராஜர் எங்கள் இனத்துக்கான அடையாளம் என்று மார்தட்டும் நாடார் இன மக்கள், இதற்கான பாடத்தை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புகட்ட வேண்டும் என்று காயத்ரி கூறியுள்ளதும், திமுக காங்கிரஸுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளதும் சலசலப்பை கூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications