எதுக்கு இந்த நாடகம்?.. பேசாம நான் சொல்ற தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வாங்க.. காயத்ரி தாக்கு
சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக சட்டசபையில் மசோதாவை முதல்வர் தாக்கல் செய்தது வெறும் நாடகம் என பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் நேற்றைய தினம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு அச்சத்தால் ஏற்கெனவே 2 முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த சேலம் தனுஷ் என்ற மாணவன் தேர்வு அச்சத்தால் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய தினம் நீட் விலக்கு மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக- திமுக காரசார விவாதம்
இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்னர் அதிமுக- திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீட் தேர்வு கொண்டு வர யார் காரணம் என்ற கேள்வி கேட்கப்பட்டது. மேலும் ஜெயலலிதா இருந்த போது நீட் உள்ளே வரவில்லையே என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, உச்சநீதிமன்ற ஆணையை எப்படி எதிர்க்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

மசோதா
இப்படி காரசார விவாதம் நடந்த நிலையில் இந்த மசோதா தாக்கலானது. நீட் தேர்வு நடுநிலையற்ற தேர்வு என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகியாக உள்ள நடிகை காயத்ரி ரகுராம் இந்த மசோதாவை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.

புதிய தீர்மானம்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஏன் இந்த நாடகம் திமுக? திமுக புதிய தீர்மானம் எடுக்க வேண்டும், திமுக தமிழக மக்களிடமும் மாணவர்களிடமும் பொய் சொல்வதை நிறுத்தும் என்று மற்றும் திமுக போலி வாக்குறுதிகளை வழங்கக்கூடாது என்று புதிய மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா
அதாவது நீட் தேர்வு விலக்கு மசோதா திமுகவின் பொய்யானது, நீட் தேர்வை ரத்தே செய்ய முடியாது என்ற ரேஞ்சுக்கு இவர் ட்வீட் போட்டுள்ளார். அது போல் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் ரத்து என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததற்கு மற்றொரு ட்வீட்டில் நடக்கும் ஆனால் நடக்காது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications