குமரிஅனந்தன் குடும்பத்திற்கு காங்கிரஸ் அளிக்காத கௌரவத்தை அளித்த பாஜக
Recommended Video
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான எந்த ஒரு கருத்துக்கும் பதிலடி கொடுத்து வந்த தமிழிசை சௌந்திரராஜனுக்கு பிரதமர் மோடி அரசு ஆளுநர் பதவி அளித்து கௌரவப்படுத்தி உள்ளது.
நீண்ட காலமாக காங்கிரசில் இருக்கும் குமரி அனந்தனின் குடும்பத்திற்கு காங்கிரஸ் அளிக்காத கௌரவத்தை பாஜக அளித்திருப்பதாக பாஜகவினர் பெருமிதம் தெரிவிக்கிறார்கள்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்திருப்பது அவரது உழைப்புக்கு கிடைத்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.

தமிழிசை குரல்
தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் ஓடிச்சென்று பதிலடி கொடுப்பார்.

சளைக்காமல் பதிலடி
ஜல்லிக்கட்டு பிரச்னையில் இருந்து, காவிரி டெல்டாவில் எண்ணெய் எடுக்கும் திட்டம், நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை, 8வழிச்சாலை திட்டம், புதிய கல்விக்கொள்கை, பொருளாதார மந்த நிலை விவகாரம் உள்பட இப்படி பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக கிளம்பிய பிரச்சாரங்களுக்கு எதிராக பாஜக மாநில தலைவர் என்ற முறையில் கடுமையாக பதிலடிகளை கொடுத்தார் தமிழிசை சௌந்திரராஜன்.

திறமையாக கையாண்டார்
பாஜகவுக்கு எதிராக தமிழகத்தில் பரப்பப்படும் பிரச்சாரங்களை திறமையாக கையாண்டுவந்த தலைவராக பார்க்கப்பட்ட தமிழிசைக்கு மத்திய பாஜக தலைமை கௌவரம் அளிக்கும் விதமாக அவரை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து உள்ளது.

பாஜக அளித்த கௌரவம்
நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியின்மூத்த தலைவராக உள்ள தமிழிசையின் தந்தை குமரி அனந்தனின் குடும்பத்திற்கு காங்கிரஸ் அளிக்காத கௌரவத்தை பாஜக அளித்திருப்பதாக பாஜகவினர் பெருமிதம் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications