கேம் சேஞ்சராகும் தினகரன்.. டெல்லி காட்டிய பச்சை கொடி.. ஆஹா பாஜக or காங்கிரஸ்? சட்டென கூடிய மவுஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் லைம்லைட்டிற்கு வர தொடங்கி உள்ளார்.

2024 லோக்சபா தேர்தலுக்கான விவாதங்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே தொடங்கி விட்டன. இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் என்ன மாதிரியான கூட்டணி வைப்பேன் என்று டிடிவி தினகரன் மௌனம் கலைத்து உள்ளார்.

2024 லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் 16 மாதங்களுக்கும் மேல் உள்ளது. ஆனால் அதற்குள் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விகள், விவாதங்கள் எழும்ப தொடங்கி உள்ளன.

2024 லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் இந்த விவாதம் நடக்க காரணம். எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியிலேயே இருப்பார் என்று ஒரு பக்கமும், இல்லை அவர் காங்கிரஸ் கூட்டணியில் இணைய போகிறார் என்று இன்னொரு பக்கமும் செய்திகள் பரவ தொடங்கி உள்ளன.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இந்த நிலையில்தான் டிடிவி தினகரனும் மெகா கூட்டணி பற்றி பேசி இருக்கிறார். முன்னதாக எடப்பாடி மெகா கூட்டணி பற்றி பேசிய போது அதை டிடிவி வரவேற்றார். அப்போது, திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைப்போம். நாங்கள், திமுகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கு எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம். திமுக என்ற தீய சக்தியை வீழ்த்துவதற்காக தயாராக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும், என்னவாக இருந்தாலும், எங்கே இருந்தாலும் சரி, மெகா கூட்டணி அமைக்கிறவர்களாக இருந்தாலும் சரி நாம் கூட்டணி அமைத்தால்தான் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த முடியும் என்று டிடிவி தினகரன் பேசினார்.

எடப்பாடி

எடப்பாடி

ஆனால் எடப்படியோ தினகரனை அதிமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள 1 சதவிகிதம் கூட சான்ஸ் இல்லை என்று கூறினார். இதையடுத்து தற்போது டிடிவி தினகரன் தனது கூட்டணி நிலைப்பாடு குறித்து ஓப்பனாக பேசி உள்ளார். அதில்,எடப்பாடி உடன் அமமுக கூட்டணி என எங்கும் சொன்னதில்லை. அதற்கு சான்ஸே இல்லை. திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமியை போல் காலையும் பிடிக்கமாட்டேன்,

பதவி

பதவி

கழுத்தையும் பிடிக்கமாட்டேன். நான் அப்படிப்பட்டவன் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்-ஐ சந்திக்க தயாராக உள்ளேன். இபிஎஸ் ஜெயலலிதாவின் தொண்டன் இல்லை. அதிமுகவின் தலைமையே யார் என தெரியாத நிலையில் தனது தலைமையில் மெகா கூட்டணி என்கிறார் இபிஎஸ். இபிஎஸ் விரக்தியின் உச்சத்தில் உள்ளார். அதிமுக செயல்படாத கட்சியாக உள்ளது. அப்படி இருக்கும் போது அவர்களுடன் எப்படி கூட்டணி.

கூட்டணி

கூட்டணி

0.25% கூட அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. பாஜக, காங்கிரஸ் என இரண்டு வாய்ப்புகள் மட்டுமே கூட்டணி வைக்க இப்போது இருக்கிறது. அதில் ஒன்று வைப்பேன். ஆனால் அதிலும் கூட எடப்பாடி தலைமையில் இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டேன், என்று டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். அவரின் பேட்டி பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. டிடிவி யாருடன் கரம் கோர்ப்பார் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

பாஜக நெருக்கம்

பாஜக நெருக்கம்

சமீப நாட்களாக இவரிடம் பாஜக நெருக்கம் காட்டி வருவதாக செய்திகள் உலவுகின்றன. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் இருந்தது. இதற்கு சுகேஷ் சந்திரா என்று இடைத்தரகரிடம் அவர் பணம் கொடுத்ததாகவும் புகார் உள்ளது.சுகேஷ் சந்திரா மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. அதில் டிடிவி தினகரனிடம் லஞ்சம் பெற்றதாகவும், இரட்டை இலை சின்னத்தை மீட்டு தருவேன் என்று அவர் பொய்யாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதாகவும் புகார் வைக்கப்பட்டது.

என்ன வழக்கு?

என்ன வழக்கு?

2017ல் அதிமுகவில் மோதல் நிலவிய போது இரட்டை இலை சின்னத்தை பெற கடும் போட்டி நிலவி வந்தது. அப்போது டிடிவி தினகரன் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பதே புகார். இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி விடுதலை செய்யப்பட்டார் டிடிவி தினகரன். அதே சமயம் இந்த வழக்கில் டிடிவி தினகரனை ஏமாற்றியதாக சுகேஷ் சந்திரா மீதும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திராவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் மேற்கொண்டு இதில் விசாரணை நடத்தப்படவில்லை.

விசாரணை இல்லை

விசாரணை இல்லை

இதில் விசாரணைக்கு இடைக்கால தடை இருந்தாலும், இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது. அதில் லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரனுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிக்கையில் டிடிவி பெயர் இல்லை. இதில் டிடிவி பெயரை அமலாக்கத்துறை நீக்கியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

வியப்பு

வியப்பு

டெல்லியின் கிரீன் சிக்னல் இல்லாமல் இது நடக்காது. பாஜகவின் குட்புக்கில் இருந்தால் மட்டுமே இது நடக்கும். அப்படி என்றால் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் சேருகிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதாவது பாஜகவும் தினகரனும் ராசியாகிவிட்டனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி முறியும் பட்சத்தில் டிடிவி - சசிகலா ஆதரவை பாஜக நாட பிளான் போடுகிறதோ... அதற்கான அடித்தளம்தான் இந்த கிரீன் சிக்னலோ என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

3 சான்ஸ்

3 சான்ஸ்

எடப்பாடி தலைவராக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டேன் என்று டிடிவி கூறி உள்ளார். இதனால் பின்வரும் மூன்று வாய்ப்புகள் உள்ளன.

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் டிடிவி பாஜகவுடன் கூட்டணி வைப்பது.

எடப்பாடி தலைமை இல்லாத பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி இணைவது.

காங்கிரஸ் - டிடிவி கூட்டணி வைப்பது. (டிடிவியே சொல்லி இருக்கிறார்)

இதில் மூன்றில் ஒன்றுதான் 2024 லோக்சபா தேர்தலில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மண்டலத்தில் கணிசமான வாக்குகளை வைத்து இருக்கும் அமமுக பெரிய கூட்டணியில் இணையும் பட்சத்தில் அது மிகப்பெரிய கேம் சேஞ்சிங் விஷயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+