சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை : உறுதியான தகவல் இல்லாமல் ப .சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடக்க வாய்ப்பில்லை எனவும், இந்த சோதனையின் அடிப்படையில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் திகார் செல்லும் வாய்ப்பு உள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Recommended Video

    ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு

    மத்திய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

    காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.

    ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை? உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு! ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை? உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு!

    சிபிஐ சோதனை

    சிபிஐ சோதனை

    ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சுமார் 5 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நடத்திய நிலையில், திட்டமிட்டு பாஜக சிபிஐ அதிகாரிகள் மூலம் மிரட்டுவதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், "டெல்லி, சென்னையில் எனது வீடுகளில் சிபிஐ நடத்தும் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.

    சோதனை நிறைவு

    சோதனை நிறைவு

    சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சிபிஐ காண்பித்த எப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை. சோதனை தருணம் சுவாரஸ்யமானது" என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    ஹெச்.ராஜா கருத்து

    ஹெச்.ராஜா கருத்து

    மேலும் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனையும் நிறைவு பெற்றதாக தகவல்கள் வெளியாகினர். இந்நிலையில் உறுதியான தகவல் இல்லாமல் ப .சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடக்க வாய்ப்பில்லை எனவும், இந்த சோதனையின் அடிப்படையில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் திகார் செல்லும் வாய்ப்பு உள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

    திகார் சிறை

    திகார் சிறை

    சோதனை குறித்து செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ள ஹெச்.ராஜா," உறுதியான தகவல் இல்லாமல் ப .சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடக்க வாய்ப்பில்லை. இந்த சோதனையின் அடிப்படையில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் திகார் செல்லும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற முடிவால் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை" என கூறியுள்ளார்.

    English summary
    BJP senior leader H Raja has said that a CBI raid on P. Chidambaram's house was not possible without definite information and that the Chidambaram family was likely to go to Tihar based on the raid.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X