ஓபிஎஸ் முடிவுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லையாம்.. தென்னரசுக்கு ஆதரவாக முழுவீச்சில் இறங்க பிளான்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை : இரட்டை இலை சின்னம் முடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் திரும்பப் பெறப்பட்டதாகவும், அந்த முடிவுக்கும் பாஜகவும் தொடர்பு இல்லை என்றும், ஓபிஎஸ் ஆதரவாளரான நாஞ்சில் கோலப்பன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தங்கள் அணியும் களமிறங்கும் என அறிவித்து வேட்பாளரையும் அறிவித்தார். ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று தனது மனுவை வாபஸ் பெற்றார்.
நேற்று முன்தினம் கூட, அவைத்தலைவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்தை நாடப்போவதாகச் சொன்ன ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற்றார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.

இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி தனித்தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்தன. அதன்படி இரு அணிகளும் தனித்தனியாக தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். இதில் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அதேபோன்று ஓபிஎஸ் அணி தரப்பில் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

வேட்பு மனு தாக்கல் நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இரட்டை இலை சின்னத்தை தனது தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரினார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய உத்தரவிட்டது.

ஓபிஎஸ் அணி வாபஸ்
அதனைத்தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் படிவங்களை நிரப்பக்கோரி அனுப்பி இருந்தார். இதில், 2501 பேர் தென்னரசுவிற்கு ஆதரவாக ஒப்புதல் படிவங்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார். இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக தங்கள் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக
அதிமுக ஓபிஎஸ் அணி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று அதிமுக ஓபிஎஸ் ஆதரவு அமைப்பு செயலாளரும், ஈரோடு கிழக்கு தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவருமான நாஞ்சில் கோலப்பன் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் முக்கிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக முழு வீச்சில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரட்டை இலை சின்னத்திற்காகவே
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் கோலப்பன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு இடைத்தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமித்துள்ளார். அதன் அடிப்படையில் தேர்தல் பணிகள் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டு வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். இரட்டை இலை சின்னம் முடங்கி விடக்கூடாது என்பதற்காக வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளோம்.

பாஜகவுக்கு தொடர்பு இல்லை
அனைவரும் ஒன்றிணைந்து அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை நாங்கள் ஒன்றிணைய தயாராக தான் உள்ளோம். அவர்கள் தான் ஒன்றிணைய மாட்டோம் என பிடிவாதமாக உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி முடிவு செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். பாஜகவிற்கும் எங்கள் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் செயல்படுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!











Click it and Unblock the Notifications