சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்திற்கு தடுப்பூசி ஒதுக்காத மத்திய அரசு.. பொங்கியெழுந்த மக்கள்.. டுவிட்டரி்ல் வறுபடும் பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திற்கு பாஜக துரோகம் செய்துவிட்டதாக கூறி நெட்டிசன்கள் டுவிட்டரில், #BJPBetrayingTNPeople என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6ஆம் தேதி தான் வரும் என்பதால் ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொஞ்சம் கொஞ்சமா ஊசி போடுங்க.. ஏன் தெரியுமா.. பாஜக முதல்வர் சொன்ன ஐடியா.. அப்படியே மிரண்டு போன மக்கள்கொஞ்சம் கொஞ்சமா ஊசி போடுங்க.. ஏன் தெரியுமா.. பாஜக முதல்வர் சொன்ன ஐடியா.. அப்படியே மிரண்டு போன மக்கள்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை தினந்தோறும் சுமார் 2 லட்சம் என்னும் அளவுக்கு அதிகரித்த நிலையில், மத்திய அரசு போதிய ஒதுக்கீடு செய்யவில்லை.

டுவிட்டரில் களேபரம்

டுவிட்டரில் களேபரம்

இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நின்றுபோயுள்ளன. இதனால் நெட்டிசன்கள், டுவிட்டரில் ஆவேச கருத்துக்களை கூறி வருகின்றன. பாஜக தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டது என்று அவர்கள் குற்றம்சாட்டி #BJPBetrayingTNPeople என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். ஏனெனில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

 வடக்கு வாழ்கிறது

வடக்கு வாழ்கிறது

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது.. என்ற முன்னாள் முதல்வர் அண்ணாவின் முக்கியமான கோஷத்தை நினைவுபடுத்துகிறார் இந்த நெட்டிசன்.

பாஜக ஆதரவாளர்கள் பார்வை

பாஜக ஆதரவாளர்கள் பார்வை


பாஜக ஆதரவாளர்கள், இந்தியாவை இப்படித்தான் பார்க்கிறார்களே தவிர ஒருங்கிணைந்த நாடாக பார்க்கவில்லை என்பதால்தான் பாரபட்சம் காட்டப்படுகிறது என்கிறது இந்த ட்வீட்.

குஜராத்தை விட குறைவான தடுப்பூசி

குஜராத்தை விட குறைவான தடுப்பூசி

குஜராத்தை விட தமிழகத்திற்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும், தமிழகத்தில்தான் மக்கள் தொகை அதிகம் என்கிறது இந்த ட்வீட்.

 கட்டிடங்கள் கட்ட பணம்

கட்டிடங்கள் கட்ட பணம்

தமிழகத்திற்கு தடுப்பூசி ஒதுக்காமல், சென்ட்ரல் விஸ்டா கட்டிடங்கள் கட்ட நிதி பயன்படுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்புகிறார் இந்த நெட்டிசன்.

English summary
Netizens have been trending the hashtag #BJPBetrayingTNPeople on Twitter, claiming that the BJP has betrayed Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X