டிடிவி தினகரன் மூலம் தூது.. ஓபிஎஸ் தரப்பை மீண்டும் இழுக்க பாஜக முயற்சி.. பின்னணியில் உள்ள காரணம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மூலமாக பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விவரமறிந்தவர்கள் கூறி வருகின்றனர். முக்குலத்தோர் சமூக வாக்குகளை அதிமுக - பாஜக கூட்டணி அறுவடை செய்ய வேண்டும் என்பதால், பாஜக தலைமை இந்த முடிவு எடுத்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அண்மையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்திக்க நேரம் கேட்டும் அனுமதி கிடைக்காத ஆதங்கத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக தரப்பில் ஓபிஎஸ் தரப்பை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்தன.

இதற்காக சென்னை வந்த தேசிய அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷை சந்திக்க வைக்க ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிஎல் சந்தோஷ் சென்னை வரும் வரை, ஓபிஎஸ் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு முடிவை கூறுவதாக ஓபிஎஸ் கூறி இருந்தார்.
இதன்பின் சென்னை வந்த பிஎல் சந்தோஷ், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் தேனியில் முகாமிட்டுள்ள ஓபிஎஸ், பிஎல் சந்தோஷை சந்திக்க சென்னைக்கு வரவில்லை. இதனால் பாஜக மேலிடம் அப்செட்டாகி இருக்கிறது. ஏனென்றால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைத்திருந்தது, பாஜகவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தது.
தென் மாவட்டங்களில் இத்தனை ஆண்டுகளாக பாஜகவுக்கு இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியது. மதுரை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, கன்னியாகுமரி என்று 5 தொகுதிகளில் பாஜக 2வது இடத்திற்கு முன்னேறியது. இதற்கு முக்குலத்தோர் சமூகத்தின் ஆதரவு இருந்ததே காரணம். இதன் காரணமாகவே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் தலைவராக கொண்டு வரப்பட்டார்.
மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை சட்டசபைத் தேர்தலிலும் அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் திடீரென ஓபிஎஸ் விலகி இருப்பது பாஜகவுக்கு சில பின்னடைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து பாஜக கூட்டணியில் இருந்ததால் மட்டுமே, முக்குலத்தோர் சமூக வாக்குகள் கிடைத்தது.
தற்போது டிடிவி தினகரன் மட்டும் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் ஓபிஎஸ் தரப்பை மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பாஜக மேலிடம் தரப்பில் டிடிவி தினகரன் மூலமாக ஓபிஎஸிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், டிசம்பருக்கு பின் என்ன செய்யலாம் என்று ஓபிஎஸ் தரப்பில் முடிவு எடுக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் முன்பாக 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. தனிக்கட்சி தொடங்கி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது அல்லது திமுக அல்லது தவெக உடன் கூட்டணி அமைப்பது மட்டுமே வாய்ப்பாக இருக்கின்றன. இல்லையென்றால் மீண்டும் பாஜக கூட்டணிக்கே செல்வது மட்டுமே ஒரே வழி. இதனால் ஓபிஎஸ் முடிவு என்னவாகும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications