பாஜகவிற்கு யோசிக்காத சிக்கல்! 107 இடங்களில் 1000 வாக்குகள் கூட வித்தியாசம் இல்லை.. துரத்தும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 280 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதில் சில தொகுதிகளில் பாஜகவின் முன்னிலை மிக மிக குறைவாக உள்ளது.

2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 280 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 238 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 225 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

நடந்து வரும் டிரெண்ட்படி பார்த்தால் லோக்சபா தேர்தலில் தொங்கு சட்டசபை உருவாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது இருக்கும் ட்ரெண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது முன்னணியிலுள்ள 280 தொகுதிகளில் சுமார் 107 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 1000 வாக்குகளுக்கும் கீழே உள்ளது.

இதில் பாஜக தனியாக 87 தொகுதிகளில் 1000க்கும் வாக்குகள் குறைவாக முன்னிலைபெற்றுள்ளது . இந்த இடங்களில் முடிவுகள் எப்படி வேண்டுமானால் மாறலாம். இங்கே எப்படி வேண்டுமானாலும் தேர்தல் முடிவுகள் அடியோடு மாறும் வாய்ப்புகள் உள்ளன .

தொங்கு நாடாளுமன்றம்; இதில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 15 தொகுதிகளில் 1000க்கும் குறைவான வாக்குகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இங்கே முடிவுகள் அடியோடு மாறும் வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல் பீகாரில் சில இடங்களிலும் பாஜக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தொங்கு நாடளுமன்ற உருவாகும் வாய்ப்புகளும் உள்ளன.,

கூட்டணியில் இல்லாத கட்சிகள்: இதனால் சில மாநில கட்சிகள் முடிவுகளை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எனப்படும் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டுமே பாஜக, இந்தியா கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆகும். இரண்டுமே தெலுங்கானா, ஆந்திராவில் முறையே வலிமையாக உள்ள கட்சிகள் ஆகும். இவை அணி சேராத கட்சிகள் என்பதால் இந்த கட்சிகள் கிங் மேக்கர்களாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

மெஜாரிட்டி: பாஜகவின் என்டிஏ கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆதரவு கொடுக்கும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். இப்போது வரும் தேர்தல் ரிப்போர்டுகள் சில தொங்கு நாடாளுமன்றம் உருவாக்கலாம் என்று கூறுவதால் இந்த அணி சேராத கட்சிகள் எங்கே செல்லும் என்பதை வைத்தே முடிவுகள் மாறும்.

2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். இப்படிப்பட்ட நிலையில் எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே முதல் கட்ட சுற்றுகள் தெரிவிக்கின்றன.

கடைசி கட்டத்தில் நெக் டூ நெக் இடங்களில் யார் வெல்ல போகிறார்களோ அவர்களின் கூட்டணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+