இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை வந்தாலும் பேசுவேன்..பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல! அண்ணாமலை
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி கிடையாது. இந்துக்களுக்கு பிரச்சினை வரும் போது முதல் ஆளாக பேசும் நான், இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பிரச்சினை வந்தாலும் முதல் ஆளாக பேசுவேன் என்று அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- சிறுபான்மை, பெரும்பான்மை என்று நான் சொல்லவில்லை. எல்லா வாக்குகளும் முக்கியம். 6 கோடி வாக்காளர்கள். எல்லா வாக்கும் சமம்தான். பாஜகவை பொறுத்தாவரை அனைவருக்கும் சமமாக இருக்கிறோம். யாருக்கும் எதிரியாக இல்லை. அதை மக்கள் வரும் காலத்தில் புரிந்து கொள்வார்கள்.

தமிழக பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல. இந்துக்களுக்கு பிரச்சினை வரும் போது முதல் ஆளாக பேசும் அண்ணாமலை, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு பிரச்சினை வந்தாலும் முதல் ஆளாக பேசுவான். அதே நேரம் நீண்ட நாள் சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுவிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னை பொறுத்தவரை தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது.
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உண்மையாக இருக்கிறோம். யாருக்கும் அநியாயம் செய்யவில்லை. யாராவது ஓரிடத்தில் தலைவர்கள் தவறாக பேசியிருந்தால் அவர்களை கூட கூப்பிட்டு கண்டித்துள்ளோம். எங்களை பொறுத்தவரை சிறுபாண்மை வாக்கு, பெரும்பாண்மை வாக்கு என்று இல்லை. எல்லா வாக்கும் சமமான வாக்குகள் தான். எல்லா வாக்குக்கும் இருக்கக்கூடிய மரியாதை சமம்.
அதற்காகத்தான் கட்சி நடத்துகிறோம். என்னை பொறுத்தவரை தீவிரவாதத்திற்கு கலர் கிடையாது. தயவு செய்து தீவிரவாதத்தை ஒரு சமுதாயத்திற்குள், ஒரு ஜாதிக்குள், ஒரு மதத்திற்குள் அடைக்க வேண்டாம். கோயம்புத்தூரில் சூசைட் பாம் பிளஸ்ட் நடந்தது. ஜமாத் கண்டித்தனர். மாநில அரசே சிலிண்டர் விபத்து என்று சொல்லும் போது அதனை ஜமாத் கண்டித்தனர். நான் ஜமாத் அவர்களை பாராட்டினேன்.
உண்மையாகவே கோயம்புத்தூருக்கு வந்திருக்க ஆபத்தை பற்றி பேசுனீங்க.. உண்மையாகவே உங்களை மதிக்கிறேன்.. சரியான வார்த்தை அது. இன்றைக்கு கோவை பாம் பிளாஸ்ட் சம்பவத்தை தீவிரவாதமாக பார்க்கிறேன். வெளியே விடக்கூடாது. இந்த நேரத்தில் அவர்கள் யாரையுமே வெளியே விடக்கூடாது என்பது தான்.. இஸ்லாமியர்களாக நான் அடைக்கவில்லை. எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகளா.. கிடையவே கிடையாது.. எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள்..
எல்லாரும் நல்லவர்கள் தான்.. யாரோ ஒருவர் செய்வதால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களை தவறாக சொல்ல கூடாது. இது தான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு.. இப்போது ஏன் அவர்களை வெளியே விடக்கூடாது என்று சொல்கிறேன் என்றால் அவர்கள் தீவிரவாதி.. தீவிரவாதி என்பதற்காக அவர்களை வெளியே விடக்கூடாது. முதல்வர் அவர்கள் ராஜதர்மமாக இதை பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications