ஓபிஎஸ் ஹெவி வெயிட் இல்லை.. கருணை அடிப்படையில் கவர்னர் பதவி.. பாஜகவிற்கு இப்படி ஒரு திட்டமா?
சென்னை: ஓ பன்னீர்செல்வத்தை பாஜக ஹெவி வெயிட்டாக கருதவில்லை. அவரை பெரிய அரசியல் நம்பிக்கையாக பார்க்கவில்லை. இப்போது ஏதோ இடம் கொடுக்கிறோம் என்று கருணை அடிப்படையில் கொடுத்துள்ளனர். அவருக்கு பின்னாடி ஏதாவது கொடுப்பார்களா என்று தெரியாது, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர்செல்வத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சீட் கொடுக்க பாஜக ரெடியாகிவிட்டது. ஆனால் உங்களுக்கு இரட்டை இலை சின்னம் இல்லை.
அப்படி இருக்க தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். உங்கள் மகன் உள்ளிட்டோர் நிற்க வேண்டும் என்றால்.. தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். பாஜகவின் தாமரை சின்னத்திலேயே நில்லுங்கள். அதுதான் முக்கியம். அப்போதுதான் நீங்களும் வெல்ல முடியும்.. தனி சின்னத்தில் நின்றால் 1 சீட்தான் என்று பாஜகவினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
கோரிக்கை: இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். இதை தொடர்ந்து வேறு வழியின்றி அவர் தனி சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டார். இதற்கு பின் என்ன நடந்தது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பேட்டி: ஒன்இந்தியாவிற்கு ப்ரியன் அளித்த பேட்டியில். ஓ பன்னீர்செல்வத்தை பாஜக ஹெவி வெயிட்டாக கருதவில்லை. அவரை பெரிய அரசியல் நம்பிக்கையாக பார்க்கவில்லை. இப்போது ஏதோ இடம் கொடுக்கிறோம் என்று கருணை அடிப்படையில் கொடுத்துள்ளனர். அவருக்கு பின்னாடி ஏதாவது கொடுப்பார்களா என்று தெரியாது.
கருணை அடிப்படையில் கவர்னர் பதவி கொடுக்க முயற்சி செய்யலாம். ஆனால் அதுவும் கூட சந்தேகம்.தான். அவர் பெரிய ஹெவி வெயிட் இல்லை என்பதால் அவருக்கு இடம் கொடுக்க யோசிக்கலாம். அவருக்கு பாஜக இப்போதெல்லாம் பெரிய அளவில் உதவி செய்வது இல்லை.
அவர் நம் கூடவே இருக்கிறார் என்பதால் பாஜக அவரை கொஞ்சம் வைத்துக்கொள்ளலாம். அவர் பழம் கனிந்து தனது மடியில் விழும் என்று நினைக்கலாம். ஆனால் அப்படி எல்லாம் நடக்காது. பாஜக அவருக்கு ஹெல்ப் செய்யாது. அவரை அனாதையாக விட்டுவிடும்.
ஓ பன்னீர்செல்வம் தவறான தொகுதியை தேர்வு செய்துள்ளார். தேனியை தினகரனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார். ஓ பன்னீர்செல்வம் சொந்த தொகுதியை விட்டுவிட்டு செல்ல கூடாது. ஏற்கனவே அங்கே அன்வர் ராஜா இருக்கிறார். நவாஸ் கனி வெற்றிவேட்பாளர். இப்படி இருக்க சுயேட்சை சின்னத்தில் ஓ பன்னீர்செல்வம் இறங்குவது மோசமான நிலையை ஏற்படுத்தும். ஓ பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு.
அன்வர் ராஜா ஓ பன்னீர்செல்வம் வெற்றிபெற அனுமதிக்கவே மாட்டார். திமுக வேட்பாளரை வெற்றிபெற வைக்க கூட சில அதிமுக தலைகள் முயற்சி செய்யலாம் . சுயேச்சை சின்னம் + ஓ பன்னீர்செல்வம் என்பது மோசமான காம்பினேஷன். அங்கே யாதவர்கள் சிறுபான்மை தொகுதிகள் வாக்குகள் அதிகம் உள்ளது. பாஜகவிற்கு அரசியல் ஆதாயம் இல்லை என்றால் யாருக்கும் எந்த பதவியும் கொடுக்க மாட்டார்கள். அவர்களை ஆதரிக்கவும் மாட்டார்கள். ஓ பன்னீர்செல்வம் நல்ல மனிதர். ஆனால் திறமையான அரசியல்வாதி கிடையாது, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications