Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழிசை இருந்தப்ப கூட நடக்கலையே.. அண்ணாமலை வந்தபின்.. லிஸ்ட் போட்ட "புள்ளி".. வீக்காகும் குதிரை

இணையத்தில்தான் அண்ணாமலையை பெரிதுப்படுத்தும் வகையில் குரல் கொடுக்கப்பட்டது, பாஜக உண்மையில் வளரவில்லை என்று ஐயன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை வந்த பின் பாஜக வளரவில்லை, ஆனால் அவரின் வருகைக்கு பின்தான் உட்கட்சி மோதல் பெரிதாகி கட்சி விவகாரங்கள் வெளியில் தெரிய தொடங்கி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை. அதிமுகவின் கேஎஸ் தென்னரசுவிற்கு பாஜக ஆதரவு தர முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைந்துவிட்டதாக, கட்சிக்கு 10 சதவிகிதம் வாக்குகள் இருப்பதாக அந்த கட்சி தலைவர்கள் பலர் கூறி வந்த நிலையில், கொங்கு மண்டலத்தில் நடக்கும் இந்த தேர்தலில் பாஜக சார்பாக யாரும் களமிறக்கப்படவில்லை.

இந்த நிலையில் பாஜகவின் இந்த நிலைப்பாட்டிற்கு என்ன காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி

பேட்டி

அவர் தனது பேட்டியில், அதிமுக வலிமை அடைய வேண்டும் என்றால் பாஜகவில் இருந்து வெளியே வர வேண்டும். பாஜகவில் இருந்து தப்பித்து அதிமுக மாநில உரிமைகள் பற்றி பேச வேண்டும். அதிமுக பழைய பன்னீர்செல்வமாக மாற வேண்டும். அதிமுக பழைய ரூட்டிற்கு திரும்பினால் மட்டுமே அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும். ஆனால் அதை அதிமுக செய்யுமா என்பது சந்தேகம்தான். அதிமுகவில் இருந்து பிரிந்த பலரும் பாஜக பக்கம் சாய்வதில் பிரச்சனை இல்லை என்று இருக்கிறார்கள். ஓபிஎஸ்,சசிகலா, டிடிவி தினகரன் எல்லாமே பாஜகவுடன் இணைந்து போக தயாராக இருக்கிறார்கள். அப்படி இருக்க அதிமுக மட்டும் எப்படி பாஜகவை எதிர்க்கும்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா மீதும் வழக்குகள் இருந்தது. ஆனால் பாஜகவால் ஜெயலலிதா மீது கை வைக்க முடியவில்லை. காரணம் ஜெயலலிதாவிற்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. மக்கள் கொண்டாட கூடிய தலைவராக ஜெயலலிதா இருந்தார். ஜெயலலிதா மீது பாஜக கை வைத்து இருந்தால் பாஜகவிற்குத்தான் சிக்கல் ஆகி இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. அப்போது பாஜகவை தடுத்த மக்கள் செல்வாக்கு இப்போது எடப்பாடிக்கு எதிராக செய்யும் போது தடுக்கவில்லை. ஜெயலலிதா இருக்கும் போது பாஜக இப்படி செய்திருந்தால் தொண்டர்கள் எல்லாம் கொதித்து போய் இருப்பார்கள்.

எடப்பாடி

எடப்பாடி

இப்போது எடப்பாடிக்காக தொண்டர்கள் அப்படி கொதிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இந்த தேர்தலில் தோல்வி அடைவோம் என்று பாஜகவிற்கு தெரியும். அதனால்தான் பாஜக நிற்கவில்லை. பாஜக நின்று இருந்தால் வாக்குகள் மேலும் பிரிந்து நிலைமை மோசமாகி இருக்கும். அதிமுகவை இப்போது பகைத்துக்கொள்ள பாஜக விரும்பவில்லை. அதனால்தான் அதிமுகவை இப்போது பாஜக ஆதரித்து உள்ளது. 2024ல் அதிமுக ஆதரவு பாஜகவிற்கு தேவை. அதனால் பாஜக அதிமுகவை ஆதரித்து உள்ளது.

பாஜக

பாஜக

அதிமுக என்னும் குதிரையை கொஞ்சம் கொஞ்சமாக வீக் செய்ய பாஜக முயற்சி செய்யும். அதுவரை அதிமுகவுடன் பாஜக இருக்கும். மற்றபடி பாஜக இன்னும் வளரவில்லை. அதனால்தான் ஈரோடு கிழக்கில் போட்டியிடவில்லை. அண்ணாமலை பெருசாகிவிட்டார் என்று வெளியே சொல்லலாம். ஆனால் பாஜகவிற்கு உண்மையான பலம் என்ன என்று அக்கட்சிக்கு தெரியும். அண்ணாமலை வந்த பின் கட்சி வளர்ந்துவிட்டது என்கிறார்கள். ஆனால் அமர் பிரசாத் ரெட்டி மீது மாரிதாஸ் புகார் வைக்கிறார். அவர் மீது முறைகேடு புகார் வைக்கிறார். காயத்திரி ரகுராம் திருச்சி சூர்யா மீது புகார்வைத்தார். சூர்யா டெய்சி மீது புகார் வைத்தார். டெய்சி கேசவ விநாயகம் மீது புகார் வைத்தார்.

டெய்சி

டெய்சி

காயத்திரி அண்ணாமலை மீது புகார் வைத்தார். அலிஷா சூர்யா மீது புகார் வைத்தார். மதன் ரவிசந்திரன் கேடி ராகவன் மீது புகார் வைத்தார். இவர்கள் எல்லாம் பாஜக தானே. பாஜகவில் அண்ணாமலை வந்த பின் இவர்கள் எல்லாம் சண்டை போட்டுகொண்டு இருக்கிறார்கள். இதுதான் பாஜகவின் வளர்ச்சியா? அலிஷா டாக்டர் கிடையாது? டெய்சி டாக்டர் கிடையாது? டெய்சி மகள் மீது புகார் உள்ளது.. அமர் பிரசாத், திருச்சி சூர்யா மீதெல்லாம் புகார் உள்ளது. அண்ணாமலை முன் வைத்த, உருவாக்கிய ஆட்கள் மீது எல்லாம் புகார் உள்ளது. இவர்கள் மீதெல்லாம் புகார் வைத்ததே பாஜக நிர்வாகிகள்தான்.

தமிழிசை

தமிழிசை

தமிழிசை காலத்தில் இப்படி நடந்ததா? பொன்னார் காலத்தில் இப்படி நடந்ததா? பேக் ஐடி வைத்து சொந்த கட்சி நிர்வாகிகளே மோதிக்கொள்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. சொந்த கட்சியினரே சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். இது மாதிரி வேறு கட்சி புகார் வைக்க முடியாது. அவர்கள் வளர்ந்த கட்சி என்று கூறுவது இணையத்தில் மட்டும்தான். இணையத்தில்தான் அண்ணாமலையை பெரிதுப்படுத்தும் வகையில் குரல் கொடுக்கப்பட்டது. ஆனால் அண்ணாமலை காட்டிய நிர்வாகிகள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டார்களே.. இதுதான் பாஜகவின் வளர்ச்சியா? என்று மூத்த பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயன் கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+