தமிழ்நாட்டில் இப்படி சொதப்பிருச்சே பாஜக.. அண்ணாமலை, நயினார் யாருமே வரல.. தமிழிசையின் பெருந்தன்மை! அட
சென்னை: தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என்று, தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த முறை திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் - அதிமுக சார்பில் ஜெயவர்த்தன், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி ஆகியோர் களம் கண்டுள்ளனர். ஆனால், அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக களமிறங்கியிருப்பதும் திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டு வருகிறது.

பாஜக: பாஜகவை பொறுத்தவரை, இந்த தென்சென்னையில் மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறது.. காரணம், பிராமண சமூகத்தின் வாக்குகளையே பிரதானமாக நம்பியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, கடந்த 2014 எம்பி தேர்தலில், 2ம் இடத்தை பிடித்த திமுகவுக்கும், 3ம் இடத்தை பிடித்த பாஜகவுக்கும், வாக்கு வித்தியாசங்கள் வெறும் 40 ஆயிரம் வாக்குகளே.. எனவேதான், 2019-லேயே தமிழிசையே இங்கு தென்சென்னையில் போட்டியிட விருப்பப்பட்டார். இப்போதுகூட, ஆளுநர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு, டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் இங்கு போட்டியிட்டுள்ளார்.
யாருக்கு தென்சென்னை: இன்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.. இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.. இதில், ஆரம்பத்திலேயே திமுக முன்னிலை பெற்று வருகிறது.. தமிழச்சி தங்கபாண்டியன் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்று வருகிறார்.. இந்த தொகுதியை பாஜக மிகவும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறது.
இதில், 2வது இடத்தை பெறும் என்று யூகிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், 3வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.. காலை 10.30 மணி நிலவரப்படி, தமிழச்சி தங்கபாண்டியன், மொத்தம் 12507 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தனர்..
மிகவும் நம்பிய தொகுதியில்கூட பாஜக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை சவுந்தராஜன் தன்னுடைய கருத்துக்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ளார்.
மகிழ்ச்சி: அதில், "அனைத்து அரசியல்வாதிகளும், அனைத்து தலைவர்களும் தங்களின் நம்பிக்கையை இந்நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த ஜனநாயக நடைமுறை உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது.
பிரச்சாரம் செய்ய எனக்கு மிகக்குறுகிய நேரமே இருந்தது. ஆனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்ன முடிவு வந்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் நம்பிக்கையானவள், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது மக்களுக்கானது. நான் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்வேன்" என்று தெரிவித்துள்ளார் தமிழிசை சவுந்தராஜன்.
பாஜக: தென்சென்னை என்றில்லை, தமிழகத்தில் பாஜக எங்குமே முன்னிலை வகிக்கவில்லை. பாஜகவின் கூட்டணி கட்சியான பாமகவை சேர்ந்த தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி மட்டுமே வெற்றியை தக்க வைப்பார் போல தெரிகிறது..
இவைகளை தவிர்த்து தமிழ்நாட்டின் வேறு எந்த தொகுதியிலும் பாஜகவும், பாஜக கூட்டணியும் முன்னிலை வகிக்கவில்லை என்பது அதிர்ச்சியை தந்து வருகிறது. தென்மாநிலங்களில்கூட வெல்வோம் என்று பாஜக சொல்லிவந்த நிலையில், நட்சத்திர வேட்பாளர்கள்கூட வெற்றி பெறவில்லை என்பது அடுத்த அதிர்ச்சியாக உள்ளது.
நயினார் தொகுதி: அதேபோல் நெல்லையில் நயினார் நாகேந்திரன், கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சவுந்தர்ராஜன், நீலகிரியில் எல்.முருகன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.. மொத்தத்தில், பாஜக வைத்திருந்த மொத்த நம்பிக்கையுமே தமிழகத்தில் தகர்ந்து கொண்டிருக்கிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications