சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவிற்கு கடும் பதிலடி கொடுக்க தயாராகும் பாஜக.. அண்ணாமலை பேச்சின் பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று சக்தியாக பாஜக வந்துவிட்டதால் நேராக மோத முடியாதவர்கள் டிவிட்டரில் மோதுகிறார்கள், அதையும் பாஜக எதிர்கொள்ளும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் மூலம் சமூக வலைதளங்களில் திமுகவிற்கு கடும் பதிலடி கொடுக்க ரெடியாகி வருவது தெரிகிறது.

தமிழகத்தில் திமுகவிற்கு மாற்று சக்தியாகி விட்டது பாஜக என்பது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து. நோட்டாவை தாண்ட முடியாத கட்சி என்று ஒரு காலத்தில் கிண்டலடிக்கப்பட்ட பாஜக, கடந்த சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

 Orange Alert: கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..! Orange Alert: கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

சட்டசபை தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் கணிசமான வாக்குகளை கைப்பற்றியது. வெற்றியின் விளிம்பு வரை வந்து இரண்டு தொகுதிகளை பறிகொடுத்தது. கடந்த 2006 ஆண்டுக்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து தமிழக சட்டமன்றத்தில் பாஜக அடியெடுத்து வைத்தது. இதனால் உற்சாகம் அடைந்த பாஜக மேலிடம் மாநில தலைவர் எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தது.

திமுக டார்கெட்

திமுக டார்கெட்

அதேநேரம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை பாஜகமாநில தலைவராக நியமித்தது. இவர் பாஜக மாநில தலைவராக மாறியதில் இருந்தே, ஒவ்வொரு விஷயத்திலும் திமுகவை டார்கெட் செய்து அரசியல் செய்து வருகிறார். செந்தில் பாலாஜி, சேகர் பாபு, முதல்வர் ஸ்டாலின் என ஒவ்வொருவரையும் அரசியல் ரீதியாக கேள்விகளை எழுப்பி அண்ணாமலை விமர்சிக்கிறார்.

திமுக பிரச்சாரம்

திமுக பிரச்சாரம்

இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சுகளை வைத்து ட்விட்டரில் ஒருபக்கம் திமுகவினர் விமர்சித்து அவரை காலி செய்ய முயற்சிக்கிறது. மறுபக்கம் பாஜகவும் பதிலடி கொடுத்து வருகிறது. ட்விட்டர் அரசியல், பேஸ்புக் அரசியல் இப்போது திமுக, பாஜக இடையே உச்சகட்டமாக உள்ளது. மத்திய அரசு மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்து திமுகவினர் கடுமையான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்.

திமுக மீம்ஸ்

திமுக மீம்ஸ்

சென்னை வெள்ள விவகாரத்தில் அண்ணாமலை படகில் சென்றபடி கேமராவில் ஷூட்டிங் செய்ய சொன்ன காட்சியை கிண்டல் செய்த திமுகவினர் செய்த மீம்ஸ் பெரிய அளவில் வைரல் ஆனது. மழை வெள்ளம் பிரச்சனை ஒருபுறம் பேசுபொருளாக இருந்த நிலையில், அதை விமர்சித்த அண்ணாமலையை பேசுபொருளாக்கினர் திமுகவினர்.

ட்விட்டர் வார்

ட்விட்டர் வார்

எதிர்க்கட்சியான அதிமுகவை விட மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜகவின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.இந்நிலையில் திமுக, பாஜகவிற்கு எதிராக செய்யும் ட்விட்டர் அரசியலுக்கு கடும் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று சக்தியாக பாஜக வந்துவிட்டது. அதை ஏற்றுக்கொண்டு கருத்தியல் ரீதியாக நேராக மோத முடியாதவர்கள் டிவிட்டரில் போரை எதிர்கொள்கிறார்கள். அதையும் பாஜக எதிர்கொள்ளும். ட்விட்டர் வார், பேஸ்புக் வார், இன்ஸ்டாகிராம் வார் என எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்வோம். நாங்கள் இதற்கெல்லாம் அசைய மாட்டோம்" என்றார்.

English summary
BJP state president Annamalai has said that those who could not clash directly are clashing on Twitter as the BJP has come as an alternative force to the DMK in Tamil Nadu. With this interview, it seems that bjp getting ready to retaliate against DMK on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X