பாஜக டூ அதிமுக.. கட்சி தாவிய உடனே ட்விட்டரில் போட்டோ மாற்றிய நிர்மல் குமார்.. கவனிச்சீங்களா! ஆஹா
தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பாஜக ஐடி விங்க் தலைவராக பொறுப்பு வகித்து வந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து இன்று திடீரென்று விலகி அதிமுகவில் இணைந்தார். கட்சி மாறிய உடனேய சிடிஆர் நிர்மல் குமார் தனது ட்விட்ட் பக்கத்தின் முகப்பு போட்டோ மற்றும் பயோவை மாற்றினார். தற்போது புதிதாக அவர் வைத்துள்ள ட்விட்டர் முகப்பு பக்கம் தான் பேசுபொருளாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை உள்ளார். அதேபோல் பாஜகவில் உள்ள பல்வேறு அணிகளுக்கும் தலைவர்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் ஒவ்வொரு கட்சிகளும் ஐடி விங்க் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இளம்தலைமுறையினரிடம் தங்கள் கட்சியின் செயல்பாடு மட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் குறைகளை கொண்டு சேர்ப்பதில் ஐடி விங்க் முதன்மையாக உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில பாஜகவின் ஐடி விங்க் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தவர் தான் சிடிஆர் நிர்மல் குமார்.

பாஜகவில் இருந்து விலகல்
இவர் பாஜக குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உடனடியாக பதிலடி கொடுத்து வந்த இவர் மாநிலத்தில் நிலவி வரும் பிரச்சனையை சுட்டிக்காட்டி திமுகவையும் விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் தான் இன்று திடீரென்று சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் ‛‛கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். என்னால் முடிந்தவரை கட்சிக்கு உழைத்தேன். இன்றோடு விடைபெறுகிறேன்'' என தெரிவித்து இருந்தார்.

அண்ணாமலை மீது குற்றச்சாட்டு
மேலும் அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அண்ணாமலையில் பெயரை குறிப்பிடாமல் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக சிடிஆர் நிர்மல்குமார், அண்ணாமலை கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை வேவு பார்க்கிறார். தொண்டர்களை மதிக்காமல் நடக்கிறார். 2019 யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20 சதவீதம் கூட இல்லை. கள எதார்த்ததை புரிந்து கொள்ள மறுத்து செயல்படுகிறார். திமுக அமைச்சருடன் திரைமறைவில் பேரம் பேசுகிறார். திமுக அமைச்சர்களை மிஞ்சும் அளவுக்க 420 ஆக இருக்கிறார். அவரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு என விமர்சனம் செய்திருந்தார்.

அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார்
இதற்கிடையே பாஜகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார். கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இதுபற்றி அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‛‛கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் கவர் போட்டோ மாற்றம்
இந்நிலையில் தான் சிடிஆர் நிர்மல்குமார் தனது ட்விட்டர் பக்கத்தின் கவர் போட்டோவை உடனடியாக மாற்றம் செய்துள்ளார். பாஜகவில் அவர் இருந்தபோது தனது கவர் போட்டோவாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், பாஜக மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்டவர்களுடன் கைகளை உயர்த்திபடி இருக்கும் போட்டோவை வைத்திருந்தார். மேலும் தமிழ்நாடு பாஜக சமூக வலைதள பிரிவு மாநில தலைவர் எனவும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுமுதலைகுளம் என சொந்த ஊர் விபரத்தை குறிப்பிட்டு இருந்தார். பாஜக மாநில ஆனால் பாஜகவில் இருந்து விலகியவுடன் அவர் அந்த போட்டோவையும், பயோவையும் மாற்றினார்.

‛‛என்றென்றும் எடப்பாடியார்’’
அதாவது அதிமுகவில் இணைந்த பிறகு என்றென்றும் எடப்பாடியார் என்பதை குறிக்கும் வகையில் ‛எடப்பாடியார் பார்எவர்' என ஆங்கிலத்தில் கவர் போட்டோவை வைத்துள்ளார். அதோடு பயோவில் இருந்த தமிழ்நாடு பாஜக சமூக வலைதள பிரிவு மாநில தவைர் என்பதை நீக்கி உள்ளார். மாறாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுமுதலைகுளம் என்பது மட்டுமே பயோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications