சினேகன் மீது வழக்குப் பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு- நடிகை ஜெயலட்சுமி தகவல்
சென்னை: பாடலாசிரியர் கவிஞர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில மகளிரணி துணைத் தலைவராக உள்ளவர்ஜெயலட்சுமி. இவர் சீரியல் நடிகையாவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இவர் மீது கந்து வட்டி புகார்கள் வந்த நிலையில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாடியில் உள்ள ஒரு வார்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ள சினேகன் , சினேகம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை எடுத்து நடத்தி வருகிறார்.

அறக்கட்டளை
தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வருவதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி சினிமா பாடலாசிரியர் சினேகன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

ஜெயலட்சுமி
அதில் ஜெயலட்சுமி பெரிய பணக்காரர்களை காப்பி ஷாப்புக்கு வர சொல்லி தனிமையில் பேசி சினேகம் அறக்கட்டளைக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டி வந்ததாக சினேகன் புகார் அளித்திருந்தார். இதை ஜெயலட்சுமி மறுத்தார். சினேகம் அறக்கட்டளை தனக்கு சொந்தமானது என்றும் தான்தான் நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

காப்பி ஷாப்
மேலும் தனிமையில் காப்பி ஷாப்பிற்கு ஆண்களை வரவழைத்து பேசி அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதாக சினேகன் என் மீது மிகவும் கொச்சையான புகாரை தெரிவித்துள்ளார். சினேகம் அறக்கட்டளை அவருக்கு சொந்தமானது என்றால் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அந்த பெயரில் என்னால் எப்படி மீண்டும் பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

அரசியலில் தோல்வி
அவருடைய அறக்கட்டளைக்கு அவர் வீட்டு பெண்களை இது போல் தனிமையில் அனுப்பிதான் சினேகன் நிதி வசூலிக்கிறாரா என்றும் ஜெயலட்சுமி கேள்வி எழுப்பியிருந்தார். அரசியலில் தன்னை எதிர்கொள்ள முடியாததால் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன் மீது வைக்கிறார். எனவே சினேகன் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெயலட்சுமி கேட்டு கொண்டார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
இந்த நிலையில் ஜெயலட்சுமி மீது அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனு அளித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் என்னுடைய சினேகம் அறக்கட்டளை தொடர்பாக கடந்த மாதம் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அவதூறு
அத்தோடு மட்டுமல்லாமல் என்னை அவதூறாக பேசியிருந்தார். அவரோட அறக்கட்டளை பெயரில் தான் பணம் வசூலிப்பதாக பொய்யாக சினேகன் பேசியுள்ளார். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த விசாரணையில் எழும்பூர் நீதிமன்றம் பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது என தெரிவித்தார் ஜெயலட்சுமி.
-
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications