புயலை கிளப்பிய வீடியோ.. பாஜக மாநில பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த கே டி ராகவன்
சென்னை: சமூகவலைதளங்களில் தன்னை பற்றி வீடியோ வெளியானதை அறிந்ததை அடுத்து பாஜக மாநில பொதுச் செயலாளர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக வழக்கறிஞரும் பாஜக மூத்த தலைவருமான கே.டி. ராகவன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்.
இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன்.

குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்! என கே. டி. ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு புயலை கிளப்பிய அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்பது குறித்து பத்திரிகையாளர் என கூறிக் கொள்ளும் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

உயர் பதவி
அதில் அவர் கூறுகையில் பாஜகவில் உயர் பதவியில் உள்ள பலர் தங்களிடம் உதவி கேட்கும் பெண்களை வீடியோ காலில் வருமாறு அழைத்து பாலியல் சேட்டைகளை செய்கிறார்கள். அந்த வகையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் என்னிடம் புகார் கொடுத்துள்ளார்.

பெண் புகார்
அந்த புகாரில் சட்டை இல்லாமல் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசும் வீடியோவை இவர் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவிலேயே அவர் மேலும் மேலும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகையாளர் தெரிவித்தார்.

வீடியோ குறித்த நடவடிக்கை
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் அனுமதி பெற்றுவிட்டுதான் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாகவும் அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். இதுகுறித்த அண்ணாமலையுடன் வாட்ஸ் ஆப்பில் நடத்திய சாட்களையும் அவர் இணைத்துள்ளார். இன்று காலை அவர் , அண்ணாமலைக்கு அனுப்பிய மெசேஜில் "கே டி ராகவன் குறித்து நான் அனுப்பிய வீடியோ குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுத்தீர்களா" என கேட்டுள்ளார்.

நியாயம் கிடைக்க
அதற்கு அண்ணாமலை கூறுகையில் "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களிடம் உள்ள வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடலாம்" என தெரிவித்தார். இதையடுத்து இந்த வீடியோவை அந்த பத்திரிக்கையாளர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்த குற்றச்சாட்டை தான் மறுப்பதாகவும் இதை சட்டரீதியில் எதிர்கொள்வேன் என்றும் ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது போல் அரசியல்வாதிகள், பிரபலங்கள் உள்ளிட்டோர் குறித்த பாலியல் குற்றச்சாட்டு வீடியோக்கள் பல வெளியாகி புயலை கிளப்பி வருகின்றன.

குவியும் பாராட்டுகள்
ஆனால் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு வீடியோக்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. தன் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் இந்த வீடியோவை தைரியமாக வெளியிட சொன்ன மாநில தலைவர் அண்ணாமலைக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. அதே நேரத்தில் வீடியோவை வெளியிட சொன்ன அண்ணாமலையுடனேயே ஆலோசனை நடத்தியுள்ளீர்களே என ராகவன் ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் பதில் அளித்துள்ளார்கள்.

கே டி ராகவன் யார்?
செங்கல்பட்டை சேர்ந்தவர் கே டி ராகவன். இவர் பாஜகவை சேர்ந்தவர். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். டிவி விவாதங்களில் இவர் பங்கேற்று வருகிறார். இவர் 1990 ஆம் ஆண்டு செங்கல்பட்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் கடந்த 2006ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சட்டசபை தேர்தலிலும் 2011 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மற்றும் 2016 ஆம் ஆண்டு கொளத்தூர் ஆகிய சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டிருந்தார்.
-
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
திமுக கூட்டணி தற்போது இல்லை.. 3 மாதம் கூட தவெக ஆட்சி தாங்காது என்பதா? கொந்தளித்த சிபிஎம் சண்முகம் -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம்












Click it and Unblock the Notifications