"A2" முத்துக்குமார் எங்கே? எந்த இடத்தில் வைத்து பாதுகாக்கிறீர்கள்? அன்பிலிடம் CCB விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ 100 கோடி முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம், இந்த வழக்கின் ஏ2 குற்றவாளி முத்துக்குமார் எங்கே என்ற கேள்வியை சிசிபி போலீஸார் எழுப்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி ரூ 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளி சங்க தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

CCB police investigates Anbil Mahesh

ஏ1 குற்றவாளி

இதில் ஏ1 குற்றவாளியாக அரசக்குமாரும், ஏ2 குற்றவாளியாக முத்துக்குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அரசக்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதை எதிர்த்து ஹைகோர்ட்டில் அரசக்குமார் மனுதாக்கல் செய்த நிலையில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கோரியிருந்த நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டது.

நிபந்தனை ஜாமீன்

விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக் கூடாது, தலைமறைவாக இருத்தல் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அன்பில் மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அன்பில் வீட்டில் ரெய்டு

இதையடுத்து அன்பில் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்களும் பென்டிரைவ்களும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்து கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்தப்பட்டது.

240 கேள்விகள்

அப்போது அவரிடம் 240 கேள்விகள் 8 மணி நேரமாக கேட்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த நிலையில் அன்பில் மகேஷை காவலில் வைத்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வு போலீஸ் முடிவு செய்திருந்த நிலையில் அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனு மீதான விசாரணை

அந்த மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றத்தில், காவல் துறை கூறுகையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்துக்குமாரை அன்பில் மகேஷ்தான் பாதுகாக்கிறார் என குற்றம்சாட்டினர். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றனர்.

முன்ஜாமீன் ரத்து

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கொடுக்கப்பட்டது. அதில் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சிசிபி போலீஸார் கோர்ட் நகலுடன் அன்பில் மகேஷின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாத நிலையில் அமைந்தகரையில் உள்ள திமுக எம்பி வில்சன் அலுவலகத்திற்கு சென்றதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

சிசிபி போலீஸ்

மேலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் முன்ஜாமீன் ரத்து உத்தரவிற்கு தடை கோரியும் நாளை அன்பில் மனுதாக்கல் செய்யவிருப்பதாகவும் தகவல் கிடைத்ததை அடுத்து , சிசிபி போலீஸ் நேராக வில்சனின் அலுவலகத்தில் காத்திருந்தனர். அங்கு ஆலோசனையை முடித்துக் கொண்டு வெளியே வந்த அன்பில் மகேஷை கைது செய்தனர்.

2 மணி நேர விசாரணை

இதையடுத்து அவர் வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது வழக்கின் ஏ2 குற்றவாளியான முத்துக்குமார் எங்கே இருக்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் அடைக்கப்படும் அன்பில்

மேலும் இன்னும் சற்று நேரத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவிட்டு உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார். பிறகு அவர் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+