குமுறிய அண்ணாமலை.. பாஜகவில் சுதந்திரம் இல்லையா? இருக்கே.. கருப்பு பதிலடி - தொடர்கிறதா கருத்து மோதல்?
உண்மையாகவே அண்ணாமலைக்கு பாஜக தலைமை சுதந்திரம் வழங்கவில்லையா அல்லது மாநில பாஜக நிர்வாகத்தில் இருக்கும் சீனியர்கள் அவ்வாறு செய்கிறார்களா என்ற விவாதங்களும் தொடர்ந்து வருகின்றன.
சென்னை: 2024 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்ந்தால் கட்சியில் வகித்து வரும் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பேசிய அண்ணாமலை, தனக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கூறி இருக்கும் நிலையில் கட்சி முழு சுதந்திரம் உள்ளது என்று கூறி இருக்கிறார் பாஜக மூத்த தலைவர்
கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுக கூட்டணி மட்டுமின்றி, தமிழ்நாடு மாநில பாஜக நிர்வாகிகளுக்கு இடையிலும் பல்வேறு சலசலப்புகளை கிளப்பி இருக்கிறது.

சுதந்திரம் வேண்டும்
அதாவது, "நான் பாஜகவை தனியாக வளர்த்து எடுக்கவே பாடுபட்டு வருகிறேன். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க தனியாக இருந்தால் மட்டுமே நம்மால் முடியும். எனக்கு உரிய சுதந்திரத்தை வழங்க வேண்டும். நான் ஒன்றும் கட்சியின் மேனேஜர் இல்லை. பாஜகவின் மாநில தலைவர் என்றுதான் நான் சொல்கிறேன்.

அதிமுக கூட்டணி வேண்டாம்
பாரதிய ஜனதா கட்சி வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், நான் கட்சியில் வகித்து வகும் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக தொடர்வேன். பாஜகவை தமிழ்நாட்டில் வெற்றிபெற வைப்பதற்கான திட்டங்களை நான் வைத்து இருக்கிறேன்.

ராஜினாமா செய்வேன்
எனது வழியில் என்னால் செயல்பட முடியாதபோது கட்சியில் நான் வகிக்கும் பதவியில் இருந்தே ராஜினாமா செய்து விடுகிறேன்." என்று கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சில் அவர் அதிமுகவில் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று அறிவித்தது சர்ச்சையாகி இருக்கிறது. அதே போல் தனக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார்.

சுதந்திரம் இல்லையா?
இதன் மூலம் அவர் கட்சியில் இதுவரை தனக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கருதுவதாகவே பலர் தெரிவிக்கிறார்கள். உண்மையாகவே அண்ணாமலைக்கு பாஜக தலைமை சுதந்திரம் வழங்கவில்லையா அல்லது மாநில பாஜக நிர்வாகத்தில் இருக்கும் சீனியர்கள் அவ்வாறு செய்கிறார்களா என்ற விவாதங்களும் தொடர்ந்து வருகின்றன.

கருப்பு முருகானந்தம் ட்வீட்
இந்த நிலையில்தான் பாஜக மூத்த நிர்வாகியும், தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளருமான கருப்பு முருகானந்தம் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "தேசபக்தி மிக்க பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு வணக்கம். நமது பாரதிய ஜனதா கட்சியில் முழுமையான கருத்துச் சுதந்திரம் உள்ளது.

விவாதிக்க வேண்டாம்
நம் கட்சியின் வளர்ச்சிக்கும் எதிர்கால திட்டங்களுக்கும் அனைத்து நிர்வாகிகளிடமும் விவாதித்து முடிவெடுப்பது வழக்கம். அவ்வாறு முடிவு எடுப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் நாம் விவாதித்த செய்திகளையும் விவாதிக்காத செய்திகளையும் பொதுத்தளத்தில் விவாதிப்பது கட்சி வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

கூட்டணி முடிவு
நமது கட்சிக்கு என்று சில நடைமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் கட்சி உரிய நேரத்தில் உரிய முடிவை அறிவிக்கும். அதுவரை கட்சி வளர்ச்சியே நமது குறிக்கோள் என்று செயல்பட்டு 2024 தேர்தல் வெற்றிக்கு பாடுபடுபவர்களே நமது உண்மையான கட்சியின் தொண்டர்களாக இருக்க முடியும்.

அதிமுக கூட்டணி
அதுவரை பொதுவெளியில் தங்களது கருத்துக்களை தவிர்ப்பதே கட்சியின் வளர்ச்சிக்கு நலம் பயக்கும். நமது கட்சியின் மாநில தலைமையும் தேசிய தலைமையும் கலந்து பேசி கூட்டணி பற்றிய முடிவை அறிவிக்கும். இதை விடுத்து ஒரு சிலர் கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாட்டிற்கும் முரணாக பொது வெளியிலும் சமுக ஊடகங்களிலும் நமது கட்சியின் உள் விவகாரங்களை பேசி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல்
இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கட்சியின் கண்ணியத்தை காப்போம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து பிரதமர் மோடி அவர்களின் கரங்களை வலுப்படுத்த உறுதியேற்போம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அண்ணாமலைக்கு பதிலா?
கருப்பு முருகானந்தம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் கட்சி விவகாரங்கள் தற்போது வெளியில் விவாதிக்காமல் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தாலும் அவரே அண்ணாமலை பேசிய 2 விசயங்களுக்கு பதிலளித்து உள்ளார். சுதந்தரம் வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுள்ள நிலையில் இவர், முழு சுதந்திரம் உள்ளதாக கூறி இருக்கிறார். அதேபோல் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று அண்ணாமலை சொன்ன நிலையில், தேசிய மற்றும் மாநில தலைமை பேசிய கூட்டணி முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications