ஊரெல்லாம் "வதந்தி".. டெல்லியில் வைத்து.. "அவரை" ஹீரோ என பாராட்டி.. ஊர் வாயை அடைத்த குஷ்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அமைச்சராகியுள்ள எல்.முருகனுக்கு குஷ்பு வாழ்த்து சொல்லி உள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.

முதலில் திமுகவில், பிறகு காங்கிரஸில் இருந்தவர் நடிகை குஷ்பூ.. ஆனால், எதிர்பார்த்த போஸ்ட்டிங் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். அப்போதுதான் அவரை பாஜக பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடந்தன.. இதில் முக்கிய பங்காற்றியவர் எல்.முருகன்தான்..

குஷ்பு பாஜக பக்கம் இணைய போவதாக தகவல்கள் கசிந்தபோது, அதை யாருமே நம்பவில்லை.. காரணம், அந்த சமயத்தில்தான் பாஜகவை வறுத்தெடுத்து கொண்டிருந்தார்.. மோடியை கேள்வி மேல் கேள்வி கேட்டு மேடைகளில் திட்டி கொண்டிருந்தார்.. இப்படிப்பட்ட சூழலில், எல்.முருகனிடம் இதை பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

"குஷ்பு பாஜக பக்கம் வர போறாங்களாமே" என்று கேட்டதற்கு, "அப்படி அவர் வந்தால் வரவேற்போம்" என்றார்.. முருகன் இப்படி சொன்னபிறகுதான், அந்த தகவல் ஊர்ஜிதமானது.. இதையடுத்து, குஷ்பு, தாமரையில் ஐக்கியமான செய்தி மீடியாவில் 2 நாளுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருந்தது.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து கட்சியில் இணைந்துள்ளதால், மிகப்பெரிய பொறுப்பை அவருக்கு தரும் என்றும் கருதப்பட்டது.

 பதவி

பதவி

இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.. அண்ணாமலை அப்போதுதான் கட்சியில் சேர்ந்திருந்தார்.. அடுத்த ஒரு வாரத்திலேயே அந்த ஜுனியருக்கு துணை தலைவர் பதவி தரவும், சீனியரான குஷ்புவுக்கு இதைவிட பெரிய பதவி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. கடைசியில் எதுவுமே இல்லை.. திமுகவின் கோட்டையான ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை இறக்கிவிட்டதுதான் மிச்சம்.

 பதவிகள்

பதவிகள்

இதற்கு பிறகு டெல்லியில் எத்தனையோ முறை பதவிகள், பொறுப்புகள் தமிழக தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.. அதில்கூட குஷ்பு பெயர் வரவில்லை.. கடந்த வாரம், சில மாநில ஆளுநர்களை மாற்றியமைத்து ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.. இதுகுறித்து குஷ்பு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.. அதில், பெண்கள் யாருமே இந்த பதவிக்கு தகுதியில்லையா? உங்கள் கண்ணில் சிறந்த பெண்கள் யாருமே படவில்லையா? என்று குடியரசு தலைவரிடமே கேள்வி எழுப்பியிருந்தார்.

 வாழ்த்து

வாழ்த்து

இதற்கு மறுநாளே, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு, முருகனுக்கும் மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது.. ஊரே கூடி முருகனை வாழ்த்தியது.. ஆனால், குஷ்பு மட்டும் வாழ்த்து எதுவுமே சொல்லாமல் இருந்தார்.. இப்போது ஒரு வாரம் கடந்த நிலையில், முருகனுக்கு மனம்திறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். முருகனை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார் குஷ்பு.

 பெருமிதம்

பெருமிதம்

அந்த ட்வீட்டில், எங்கள் ஹீரோ என்று பெருமிதத்துடன் முருகனை குறிப்பிட்டுள்ளார். எங்கள் தமிழ்நாட்டின் ஹீரோ முருகனுக்கு இந்த பதவி கிடைத்தது மகிழ்ச்சி என்றும், என்னை கட்சிக்கு அழைத்து வந்ததில் முக்கிய பங்காற்றியவர்.. அவருக்கு எப்போதுமே நான் நன்றியுடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இருந்தாலும் ஒருசிலர் மேடம், திமுக பக்கம் போக போறீங்களாமே உண்மையா? என்றும் தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+