தக்காளி வாங்க கடைக்கு போன எல்.முருகன்.. அப்பறம் நடந்ததுதான் ஹைலைட்.. தடதட தாராபுரம்..!
பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்தார்
சென்னை: "தேசிய, தமிழக தலைவர்கள் தாராபுரத்துக்கு வந்து பிரச்சாரம் செய்துள்ளதால், நாளை தாராபுரம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற போகிறது" என்று பாஜக வேட்பாளர் எல்.முருகன் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறார்.. அத்துடன் தாராபுரத்தில் முருகனின் பிரச்சாரமும் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
Recommended Video

பாஜகவின் தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடுவதால், தாராபுரம் தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது.. முருகன் ஏற்கனவே இங்கு 3 முறை களம் கண்டுள்ளார்..
ஆனால் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.. இந்த முறையும் களம் கண்டுள்ளார்.. எனவே தாராபுரத்தை தக்க வைப்பாரா என்பது தெரியவில்லை.. மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இது உருவெடுத்துள்ளது.

அதிமுக
எனினும், தன்னுடைய பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.. தேசிய தலைவர்கள் தனக்காகவே வந்து பிரச்சாரம் செய்வதாலும், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாலும், நிச்சயம் வாக்குகளை அள்ளுவேன் என்ற நம்பிக்கையில் உள்ளார்.. இதற்காக தன்னுடைய பிரச்சாரங்களையும் தீவிரப்படுத்தி வருகிறார்.

தெலுங்கு
தாராபுரத்தில், டீ கடைசியில் டீ குடித்து கொண்டே வாக்கு சேகரிக்கிறார்.. இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. அங்குள்ள தெலுங்கு பேசும் மக்களிடம் தெலுங்கில் பேசியே வாக்கு சேகரித்து வருகிறார்... முருகன் தெலுங்கில் பேசுவதை கேட்டு பலர் வியப்பாக பார்த்து கொண்டே சென்றனர்..

எல். முருகன்
அதுபோலவே, தாராபுரம் உழவர் சந்தையிலும் முருகன் ஓட்டு சேகரித்தார்... அப்போது, அந்த மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கான திட்டங்கள் குறித்து அவர்களிடம் எடுத்து சொன்னார்.. பிறகு ஒரு காய்கறி கடைக்கு சென்று தாமரைக்கு ஓட்டு போடுங்க என்று கேட்டுவிட்டு, ஒரு கிலோ தக்காளி வாங்கினார்.. அந்த தக்காளிக்கு உரிய காசு தந்துவிட்டார் முருகன். ஆனால், அந்த கடைக்காரர் தக்காளியை ஒரு பாலிதீன் கவரில் போட்டு தராமல், ஒரு பெரிய பேப்பர் எடுத்து அதில் மடித்து தந்தார்..

தக்காளி
இதை பார்த்ததும் தக்காளி கடைக்காரரை முருகன் பாராட்டினார்.. அத்துடன், எப்பவுமே பிளாஸ்டிக் யூஸ் பண்ண கூடாது என்று ஒரு குட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.. எப்படியோ, 3 முறை தவற விட்ட வாய்ப்பை இந்த 4வது முறையாவாவது முருகன் பெற்றுவிடுவாரா? தாராபுரத்தில் தாமரை மலருமா? பார்ப்போம்..
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
கடன் சுமை டூ வங்கி இருப்பு! 12 வருடத்தில் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றிய கிசான் சம்ரித்தி திட்டம் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications