ஏங்க மறுபடியும் மறுபடியும் கலவரம்னு சொல்றீங்க.. எங்கே நடந்தது கலவரம்? திடீரென கொந்தளித்த முருகன்
சென்னை: "ஏங்க மறுபடியும் மறுபடியும் கலவரம்னு சொல்றீங்க? அப்படின்னா எங்க யாத்திரையில் எதிர்க்கட்சிகள் கலவரத்தை செய்ய திட்டமிட்டிருக்காங்களா? என்ன பிரச்சனை வந்துச்சு? எப்போ கலவரம் வந்தது? சொல்லுங்க" என்று மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்!
நேற்று முன்தினம் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, பாஜகவின் வேல் யாத்திரை குறித்து நீண்டதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அதில், "நீங்க எழுதி வெச்சுங்க.. நவம்பர் 1 முதல் டிசம்பர் 6 வரை நடத்தறாங்களாம்.. 1-வரை யாத்திரை நடத்தலாமே? எங்க அண்ணன் திருமாவளவன் அதைதானே கேட்கிறார்.. அது ஏன் 6 வரை நடத்துறீங்க?
ஏன்னா, டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கருக்கு உரிய நாள், பாபர் மசூதி நினைவு நாள் இருக்கு.. தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமிய மக்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாதுன்னு தான் அந்த நாளை குறி வெச்சி அடிக்கிறீங்க?
இஸ்லாமிய மக்கள் அன்றைய தினம் துயர நாளை அனுஷ்டிக்க ஒன்றுகூடுகிறார்கள்.. அந்த நாள் வரைக்கும் வேல் பயணத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் என்ன? வடமாநிலங்களை போலவே இங்கும் கலவலரத்தை தூண்டி, வாக்குகளை எடுக்க பார்க்கிறது.
அரசு இந்த வேல்பயணத்துக்கு 6-ம் தேதி வரை அனுமதிக்க கூடாது.. 1-ம் வரை அனுமதிக்கலாம்.. அல்லது 2ம் தேதி வரை அனுமதிக்கலாம்.. " என்று கூறியிருந்தார். சீமான் சொன்னதைபோலவே, மற்ற எதிர்க்கட்சிகளும், வேல்யாத்திரையில் கலவரம் வெடிக்கலாம் என்று கூறி, அந்த யாத்திரைக்கு தடை கோரி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் பாஜக தலைவர் எல்.முருகனிடம் இதே கேள்வியை கேட்டனர்.. அதற்கு முருகன் ஆவேசமாகிவிட்டார்.
"ஏன் மறுபடியும் மறுபடியும் கலவரம்னு சொல்றீங்க? அப்படின்னா எதிர்க்கட்சிகள் கலவரத்தை செய்ய திட்டமிட்டிருக்காங்களா? எங்க யாத்திரையில் கலவரத்தை திட்டமிட்டு செய்யறதுதான் உங்களுடைய எண்ணமாக இருக்கா? ஏங்க, வடமாநிலம் பற்றி பேசறீங்க? இங்கே தமிழ்நாட்டில் சொல்லுங்க, எப்போ கலவரம் வந்தது? எங்கே பிரச்சனை வந்தது? 2 வருஷத்துக்கு முன்னாடி ராம யாத்திரை வந்ததே, என்ன பிரச்சனை அப்போ வந்தது? சொல்லுங்க" என்று கேள்வி எழுப்பினார்!
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications