“உதயநிதி ஸ்டாலினை நினைத்து பெருமையா இருக்கு”.. பாராட்டித் தள்ளிய பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா!
சென்னை: தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுவதாக பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார். சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்தப்பட்டதை தமிழக பாஜக தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், பாஜக நிர்வாகியான அலிஷா அப்துல்லா, வெளிப்படையாகவே உதயநிதி ஸ்டாலினை பாராட்டி உள்ளார்.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு செஸ் ஒலிம்பியாட் உள்பட தமிழ்நாட்டில் சர்வதேச போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ஃபார்முலா 4 இரவு நேர ஸ்ட்ரீட் கார் பந்தய போட்டியை நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டிருந்தது.

கடந்த டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கார் ரேஸ் நேற்றுமுன் தினமும் நேற்றும் நடைபெற்றது. சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, கொடிமர இல்ல சாலை என தீவுத்திடலை சுற்றிலும் 3.8 கிமீ நீளமுள்ள சர்க்யூட்டில் இந்த கார் ரேஸ் நடைபெற்றது. இதில் 19 சாலை திருப்பங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தியாவில் ஃபார்முலா 4 இரவு நேர ஸ்ட்ரீட் கார் ரேஸ் நடப்பது இதுவே முதல் முறை.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் இந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டி நடைபெற்றது. ஃபார்முலா 4 வாகனம் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த கார் பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு, ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூர் ஸ்டெஸ்டர் உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொண்டன.
இந்தப் போட்டியின் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தெற்காசியாவிலேயே ஃபார்முலா 4 இரவு நேர ஸ்ட்ரீட் கார் ரேஸ் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை என்ற நிலையில் சினிமா பிரபலங்கள் உள்படப் பல தரப்பினரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஃபார்முலா 4 ரேஸ் நடத்தியதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாஜக நிர்வாகியும், பைக் ரேஸருமான அலிஷா அப்துல்லா பாராட்டியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், சென்னையில் இப்போது ஃபார்முலா 4 ரேஸ் முக்கியமா என நிறைய பேர் கேட்கின்றனர். ஒரு வீராங்கனையாகப் பார்த்தால் இது முக்கியம் தான்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவர் நிறைய உதவிகளைச் செய்கிறார் என்பதை மறுக்க முடியாது. சென்னையின் மையப்பகுதியில் கார் ரேஸ் நடத்துவது என்பது சுலபமான விஷயம் அல்ல. அனைத்து பிரச்சனைகளையும் கடந்து அவர் இதைச் செய்துள்ளார். அவருக்கு ஹேட்ஸ் ஆஃப்" என்று தெரிவித்துள்ளார்.
பிரபல பைக் ரேஸ் வீராங்கனையான அலிஷா அப்துல்லா தமிழக பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். 9 வயதில் இருந்தே பைக், கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்று வரும் அலிஷா அப்துல்லா, பல போட்டிகளில் வென்று பதக்கங்களைக் குவித்துள்ளார். கார், பைக் பந்தயங்களில் இந்தியாவிலேயே சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர் அலிஷா அப்துல்லா.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதை தமிழக பாஜக தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது. இந்த கார் ரேஸுக்கு எதிராக பாஜக நிர்வாகி வழக்கு தொடர்ந்ததால் ரேஸ் நடத்துவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டு கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு ரேஸ் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாஜக நிர்வாகி, ஃபார்முலா 4 கார் ரேஸை சிறப்பாக நடத்தியதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications