அமித்ஷாவின் சென்னை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7 ஆம் தேதி சென்னை வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. திமுக ஒரு கூட்டணியாகவும், அதிமுக பாஜக ஒரு கூட்டணியாகவும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு அணியிலும், சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு அணி என தற்போதைக்கு 4 முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அதிமுக பாஜக கூட்டணி அமைக்கப்பட்ட நேரத்தில் தமிழகம் வந்திருந்த அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவித்தார். மேலும் கூட்டணியை வலுப்படுத்த அதிமுக பாஜக கூட்டணி முயற்சித்து அதற்கான நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இதில் குறிப்பாக பாமகவை அதிமுக பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சிகள் ரகசியமாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், பாமகவில் தந்தை மகன் மோதல் இருந்து வருவதால் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இருக்குமா அல்லது விலகுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ராமதாஸ் திமுக பக்கம் செல்ல விரும்புவதாகவும், அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும், இதனாலேயே தந்தை மகன் பிரச்சினை நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தந்தை மகன் மோதலை சமாதானப்படுத்தி பாமகவை அதிமுக - பாஜக கூட்டணி பக்கம் இழுக்க ஒரு புறம் முயற்சி நடப்பதாகவும் பேசப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 7 ஆம் தேதி சென்னையை அடுத்த காட்டாள்குளத்தூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வர இருப்பதாக கூறப்பட்டது.
அதிமு பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது தமிழக பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் - அன்புமணி இருவருக்கும் இடையே நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அமித்ஷா சென்னை வரும் போது இருவரையும் சந்திக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் இருவருமே சமாதானம் ஆகாததன் காரணமாக அமித்ஷாவின் சென்னை பயணம் ரத்தாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications