Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பஸ்ஸில் அட்ராசிட்டி காவலர்! சொன்னீங்களே..செஞ்சீங்களா? ஆறுமுகபாண்டி ஆதரவாக வந்துட்டாரே அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகபாண்டியை இது போன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தில் சீருடையில் இருந்த ஆறுமுகபாண்டி என்ற காவலர் ஏறினார். நாங்குநேரி பேருந்து நிறுத்தத்தில் ஏறிய அந்த காவலரிடம் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.

BJP leader Annamalai insists that policeman should be allowed free travel

தானும் ஒரு அரசு ஊழியர் தன்னிடம் ஐடி கார்டு இருக்கிறது டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது என காவலர் ஆறுமுகபாண்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சீருடை காவலர்: மேலும்,"அரசு பேருந்தில் அரசு பணியில் இருப்பவர்கள் பணி நேரத்தில் செல்லும் பொழுது டிக்கெட் எடுக்க தேவையில்லை எங்களுக்கு டிக்கெட் கிடையாது என அவர் பேசினார். அரசு பேருந்தில் பயணித்தாலும் காவலர்களுக்கு இலவசம் கிடையாது.. வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணிக்க முடியும்" என நடத்துனர் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டுமா? வேண்டாமா என்று காரசார விவாதம் நடைபெற்றது.

போக்குவரத்து துறை: இந்த நிலையில் இது தொடர்பாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்து இருந்தது. அதில்,"தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் கட்டணமின்றி தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும், மற்ற நேரங்களில் காவலர்கள் பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டும்.

அண்ணாமலை: தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச்சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில், காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது." என கூறப்பட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,"பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டியை இது போன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இலவச பயணம்: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"கடந்த 2021 - 2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அறிவித்துள்ள நிலையில், காவலர் திரு. ஆறுமுகப்பாண்டி அவர்களை, இது போன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

நடவடிக்கை எடுக்கக் கூடாது: உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, காவலர் திரு. ஆறுமுகப்பாண்டி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்." என கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+