ரூ.4730 கோடி மணல் கொள்ளை.. மொத்தமாய் சுருட்டிய ‘கம்பெனி’! துரைமுருகனை தூக்குங்க.. பாஜக ‘தலை’ ஆவேசம்
சென்னை: தமிழகத்தில் மணல் கடத்தல் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதமும் எழுதியுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகனை கைது செய்ய வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
தமிழகத்தில் சுமார் ரூ 4,730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஏற்கெனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. மணல் குவாரிகளில் ஏற்கெனவே மத்திய புலனாய்வுத் துறை அமைப்புகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் தமிழகத்தில் மணல் கொள்ளை நடந்துள்ளதாகவும், சுமார் 4700 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான கடிதத்தில்,”பணப்பரிவர்த்தனை முறைகேடு தடுப்புச் சட்டம் பிரிவின் படி இந்த கடிதத்தை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. அதில் கடந்த 9 மாதங்களாக அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் தமிழகத்தில் 2023- 2024 ஆம் காலகட்டத்தில் சட்டவிரோதமாக 23.64 லட்சம் யூனிட் மணல் கொள்ளை நடந்துள்ளது. குத்தகைக்கு விடப்பட்ட மணல் படுகைகளில் மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலமாக தனியார் ஒப்பந்ததாரர்கள் எப்படி மணலை சட்டவிரோதமாக எடுத்தனர் என்பது குறித்து விரிவான தகவல்களையும் அமலாக்கத் துறை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை விட 10 முதல் 30 மடங்கு அதிகமாக மணல் எடுத்துள்ளனர்.
ஒரே இடத்தில் 4.9 ஹெக்டேரில் மணல் எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. 5 மாவட்டங்களில் 190 ஹெக்டேரில் பரப்பளவில் 28 இடங்களில் மணல் எடுக்க குத்தகைதாரர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டவிரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவுக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் ஆளில்லா விமானங்களால் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் தெரியவந்தது.
மாநில அரசின் நீர்வளத் துறை அனுமதி அளித்துள்ள குவாரிகளில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் குவாரிகளில் மணல் எடுக்க அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த ஆவணங்களை வைத்து உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள ஐஐடி நிபுணர்கள் உதவியுடன் அறிவியல் பூர்வமாக எந்த ஆழத்திற்கு எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என ஆய்வு நடத்தப்பட்டது. தொடர் விசாரணையில் அரசு 490 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் 2,450 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மணல் கொள்ளை குறித்து தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதமும் எழுதியுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகனை கைது செய்ய வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் செய்திகளை பகிர்ந்துள்ள அவர்,”தமிழக காவல்துறை என்ன செய்கிறது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது. பாஜக போராட்டத்தை தடுப்பது பாஜக நினர் மீது வழக்கு தொடர்வது, திமுகவின் boy scout போல் செயல்படுவது இது மட்டுமே அவர்கள் பணி. டிஜிபி முழு விளக்கம் தர வேண்டும். குற்றசாட்டில் உண்மையிருப்பின் துறைமுருகனை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த திமுக ஊழல் ஆட்சியிலிருந்து தமிழகத்திற்கு விரைவில் விடுதலை தேவை” என பகிர்ந்துள்ளார்.
-
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்!












Click it and Unblock the Notifications