அரசு நிகழ்ச்சியில் இந்துமத பூஜைக்கு எதிர்ப்பு-திமுக எம்.பி.செந்தில்குமாருக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்
சென்னை: அரசு நிகழ்ச்சியில் இந்துமத அடிப்படையில் பூமி பூஜைகள் நடத்த திமுக எம்.பி. செந்தில்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் திமுக எம்.பி. செந்தில்குமாரின் எதிர்ப்புக்கு பாஜகவின் எச்.ராஜா, நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஏரியை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இந்த சீரமைப்புப் பணி தொடக்க நிகழ்வில் இந்து மத சம்பிரதாயப்படியான பூமி பூஜை நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒரு மதம் சார்ந்த பூமி பூஜை நிகழ்ச்சிகளை அரசு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க முடியாது என திமுக எம்.பி.செந்தில்குமார் கண்டனம் தெரிவித்தார். இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்த அதிகாரிகளையும் செந்தில்குமார் எம்.பி. கண்டித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. இது தொடர்பான விவாதங்களும் நடைபெற்றது.
திமுக எம்.பி. செந்தில்குமாரின் இந்த நடவடிக்கையை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். பாஜகவின் மூத்த் தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளதாவது: அரசு விழாவில் இந்துசமயப்படி பூஜை செய்யக்கூடாது என்று பூஜையை கலைத்த தமிழை சரியாக உச்சரிக்க தெரியாத தற்குறி செந்திலின் இந்து விரோத செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்து கோவில்கள் மட்டும் அரசிடம் உள்ளவரை அரசு விழாக்களில் இந்து முறைப்படியான பூஜைதான் நடத்த வேண்டும். இது திராவிட மாடல் அரசு என்று பேசும் செந்தில் திரு.சேகர் பாபு அலுவலகத்தில் நுழைந்து உங்கள் நிர்வாகத்தின் கீழ் எங்கே சர்ச்,எங்கே மசூதி,எங்கே மணியம்மை டிரஸ்ட் எல்லாத்தையும் அரசுடைமையாக்கு என்று கூச்சலிட தைரியம் உண்டா? மானம்கெட்ட பச்சை இந்து விரோத செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. இவ்வாறு எச்.ராஜா கூறியுள்ளார்.

பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயண் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில், மாம்கள் எங்கே? பாதிரியார் எங்கே? திராவிடர் கழகத்தினர் எங்கே? அவர்கள் அனைவரும் இல்லாமல் ஹிந்து மத வழக்கப்படி மட்டும் பூஜை போடுவது சரியா? என்று கேட்கிறார் தி மு க மக்களவை உறுப்பினர் செந்தில்குமார். மசூதிகள் எங்கே? சர்ச்சுகள் எங்கே? தி க வின் சொத்துக்கள் எங்கே? அவைகள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராமல் ஹிந்து கோவில்களை மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சரியா? என கேட்பாரா செந்தில் குமார் அவர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா?












Click it and Unblock the Notifications