புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026.. பாஜக வெளியிட்ட அசத்தலான.. தேர்தல் அறிக்கை!
சென்னை: தமிழ் புத்தாண்டு என்னும் நன்னாளில், தமிழக பாஜக தனது தேர்தல் அறிக்கையான "புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026"-ஐ வெளியிட்டுள்ளது. இது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். "சங்க கால வேர்களில் இருந்து செழிப்பான எதிர்காலத்தை நோக்கி" என்ற தொலைநோக்குப் பார்வையுடன், ஒவ்வொரு குடிமகனின் தேவைகளையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான அதிகாரம்
பெண்கள் நலனுக்காக 360 டிகிரி அணுகுமுறையை பாஜக முன்வைக்கிறது:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஆண்டுக்கு மூன்று இலவச எல்பிஜி (LPG) சிலிண்டர்கள் வழங்கப்படும்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க 'ஜீரோ எஃப்ஐஆர்' (Zero FIR) முறை சீரமைக்கப்படும்.
சிறு குறு கடன்களாக ₹50 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
எலக்ட்ரிக் வாகனம் வாங்க ₹25,000 மானியம் வழங்கப்படும்.
இளைஞர்களின் செழுமைக்காக:
1 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கல்விக்கடன் கட்ட முடியாமல் தவிக்கும் வேலையற்ற இளைஞர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும்.
12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு AI மற்றும் ரோபாட்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழக மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
2,000 இளம் தொழில்முனைவோருக்கு ₹15 லட்சம் வரை வட்டி இல்லா கடன் மற்றும் முதலாம் தலைமுறை மாணவர்களுக்கு ₹10 லட்சம் வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
விவசாயிகள் மற்றும் மீனவர் நலன்
நிலத்தின் முதுகெலும்பான விவசாயிகளை கௌரவிக்கும் வகையில்:
PM-KISAN திட்டத்தின் கீழ் கூடுதலாக ₹3,000 மாநில அரசு சார்பில் வழங்கப்படும்.
கால்நடை வளர்ப்பிற்கு ₹50,000 நிதியுதவி அளிக்கப்படும்.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சிறிய எஃகு சேமிப்புக் கிடங்குகள் (Silos) அமைக்கப்படும்.
100 கி.மீ தொலைவிற்குள் பருத்தி அரைக்கும் ஆலைகள் (Ginning Mills) அமைக்கப்படும்.
மீனவர் சமூகத்திற்காக, மீன்பிடி தடைக்கால நிவாரணம் ₹12,000-ஆக உயர்த்தப்படும். லீன் பீரியட் (Lean period) உதவித்தொகை ₹8,000-ஆக உயர்த்தப்படும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதம் ₹2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி
தமிழகத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, மத்திய அரசுடன் இணைந்து 10 'பிளக் அண்ட் பிளே' (Plug-and-Play) தொழில் பூங்காக்கள் பாரத் உத்யோகிக் விகாஸ் யோஜனா (BHAVYA) கீழ் அமைக்கப்படும். ரயில்வே துறையில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வர:
சென்னை-பெங்களூரு-ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.
கோவை-திருப்பூர்-சேலம் இடையே பிரத்யேக RRTS வழித்தடம் அமைக்கப்படும்.
சென்னை முதல் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவிற்கு புதிய 'ஸ்லீப்பர் வந்தே பாரத்' ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
முன்னோடி திட்டமாக ஹைட்ரோ பவர் ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.
தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழகத்தை இந்தியாவின் "கடல்நீர் சுத்திகரிப்பு தலைநகராக" மாற்ற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. கடலூரில் பிரத்யேக கடல்நீர் சுத்திகரிப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். மேலும், பிஎம் சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு மாநில அரசு சார்பில் கூடுதலாக ₹25,000 மானியம் வழங்கப்படும்.
கலாச்சாரம் மற்றும் சமூக பாதுகாப்பு
நமது ஆன்மீக பாரம்பரியத்தை போற்றும் வகையில், தைப்பூசம் மாநில திருவிழாவாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கோயில்களின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க 'திருக்கோவில் நித்ய பூஜைத் தொகுப்புத் திட்டம்' அறிமுகப்படுத்தப்படும். இதில் கற்பூரம், நெய், 60 கிலோ அரிசி மற்றும் பூஜைப் பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்படும். பராமரிப்பு மற்றும் திருவிழாக்களுக்காக ஆண்டுக்கு ₹25,000 மானியம் வழங்கப்படும். திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் நிலைநாட்டப்படும்.
சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க, 'தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை' மற்றும் 'போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு' ஆகியவை உருவாக்கப்படும். பொது சுகாதாரத்திற்காக, தமிழகத்தின் 10 நகரங்களை இந்தியாவின் தூய்மையான 100 நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வதுடன், முதியவர்களுக்கு இலவச வீட்டு சுகாதார பரிசோதனை மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.
இரட்டை எஞ்சின் அரசாங்கம்
இந்த "தாமரை வாக்குறுதிகள்" அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகளாகும். ஊழல் மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) 'இரட்டை எஞ்சின்' அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதே ஒரே வழி. தமிழக மக்கள் தாமரைக்கு வாக்களிப்பதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வார்கள் என பாஜக நம்பிக்கை கொள்கிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்












Click it and Unblock the Notifications