பேச்சை கேட்கலைன்னா.. யாரை வேண்டுமானாலும் பாஜக முடக்கும்.. எடப்பாடிக்கு "வார்னிங்" தரும் புள்ளி!
தங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் பாஜக யாரையும் முடக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று குபேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: பாஜகவை நம்ப கூடாது, பாஜக நினைத்தால் எந்த கட்சியை வேண்டுமானாலும் முடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்றுள்ளார். இந்த வெற்றி காரணமாக விரைவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி அதிகாரப்பூர்வமாக பொதுச்செயலாளர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில்தான் பாஜக நினைத்தால் அதிமுக எதிராக செயல்பட கூட வாய்ப்பு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றை தலைமை
கடந்த காலங்களில் ஒற்றை தலைமை வரும்போதெல்லாம் அதிமுகவிற்கு எதிராக பாஜக இருந்ததாக கூறப்பட்டது. உதாரணமாக சசிகலா அந்த இடத்தை பிடிக்க சென்ற போது சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்ய விடாமல் காலம் தாழ்த்தியது. அதன்பின் டிடிவி தினகரன் அந்த இடத்தை பிடிக்க முயன்ற போது அவருக்கு திகார் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.. அதிமுகவில் ஒற்றை தலைமை வரும் போதெல்லாம் பாஜக இப்படித்தான் ட்ரீட் செய்யும் என்று கூறப்படுகிறதே. பாஜக இப்படித்தான் எடப்பாடியையும் ட்ரீட் செய்யுமா? அவருக்கும் இப்படி திட்டம் வைத்து இருக்குமா என்ற கேள்விக்கு மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பதில் அளித்துள்ளார்.

பேட்டி
ஒன்இந்தியா தமிழுக்கு அவர் அளித்துள்ள பதிலில், பாஜக எதையும் செய்ய கூடிய கட்சித்தான். அதை மறுப்பதற்கு இல்லை. அதிமுக ஒன்றும் பாஜகவிற்கு அவ்வளவு நெருக்கம் இல்லை. பாஜகவுடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்த கட்சி சிவசேனா. ஆனால் சிவசேனாவை உடைத்து, அவர்களை நிர்மூலமாக்கி வேறு கையில் கொடுத்த கட்சிதான் பாஜக. பாஜக நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும். பாஜக நினைத்தால் அதனால் நடவடிக்கை எடுக்க முடியும். அதை மற்ற கட்சிகள் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். சிவசேனாவிற்கு நடந்ததை பார்த்து இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

என்ன சொன்னார்?
தங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் பாஜக யாரையும் முடக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஜெயலலிதா வலிமையான தலைவர். அவர் இறந்த பின் அதிமுக துண்டாக உடையும் என்று பாஜக நினைத்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை. எடப்பாடி சுதாரித்து.. சமயோஜிதமாக் செயல்பட்டார். தனக்கு நெருக்கமான சிலரை வைத்து பாஜகவிற்கே செக் வைக்கும் வகையில் பேச வைத்தார். அதிமுக என்ற குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பாஜக நினைத்தது. அது நடக்கவில்லை. எடப்பாடி கட்சியை கொஞ்சம் காப்பாற்றிவிட்டார் என்று சொல்லலாம்.

குழப்பம்
2024 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் எடப்பாடியின் உண்மை முகம் தெரியும். பாஜகவிடம் இறங்கி சொல்கிறாரா அல்லது கண்டிப்புடன் இருக்கிறாரா என்று பார்க்க வேண்டும். பாஜகவிற்கு அடிபணிய எடப்பாடி இறங்கி செல்வாரா அல்லது வலிமையாக இருப்பாரா என்று பார்க்க வேண்டும். பாஜகவிற்கு கடந்த முறை அதிக இடங்களை எடப்பாடி கொடுக்கவில்லை. இப்போது எடப்பாடி இன்னும் வலிமையுடன் இருக்கிறார். அப்படி இருக்கும் நிலையில் பாஜக கேட்கும் இடங்களை எடப்பாடி கொடுப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், என்று பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications