என் லிமிட் இல்ல.. நழுவிய நயினார் நாகேந்திரன்! உதயநிதி ரூ.3 கோடி கேட்டாரே -பாஜக எம்எல்ஏ அடடே விளக்கம்
சென்னை: பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு ஹாக்கி டர்ஃப் வாங்க பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனிடம் அமைச்சர் உதயநிதி ரூ.3 கோடி கேட்ட நிலையில், அது தன்னுடைய தொகுதி எல்லைக்குள் வராது என்று நயினார் பதிலளித்துள்ளார்.
நேற்று தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து ஒரு படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு கண்டெய்னருக்கு கிரேன் இருப்பதை போன்ற காட்சி இருந்தது.

அதில் அவர், "மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு! பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையில் இருந்து மிகவும் பழைய ஹாக்கி டர்ஃப் (Hockey turf) அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதை அமைப்பதற்கான செலவே மிகவும் அதிகம். எனவே புதிய ஹாக்கி டர்ஃப் (Hockey Turf) அனுப்பி வைத்து அதனை அமைக்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதனை ட்விட்டரில் ரீடுவீட் செய்து பதிவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வணக்கம், சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டியாக, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கவுள்ளது.
இதற்காக எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை கழக அரசு ரூ.15 கோடி செலவில் புனரமைத்து வருகிறது. சர்வதேச அளவிலான இப்போட்டிக்காக புதிய Hockey Turf-ஐ அமைக்கவுள்ளோம். மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட Turf, தேசிய அளவிலான போட்டிகள் & பயிற்சிக்காக இன்னும் 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது.
ஆகவே, அந்த Hockey Turf வேண்டுமென்று தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்தனர். விளையாட்டு வீரர்கள் அதிகம் நிரம்பிய பாளையங்கோட்டை பகுதியிலிருந்தும் அத்தகைய கோரிக்கை வந்தது. எனவே, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையிலிருந்த Hockey Turf-ஐ வழங்கினோம்.
புதியது தான் வேண்டுமெனில் சென்னையிலுருந்து அனுப்பப்பட்ட Hockey Turf-ஐ தேவையுள்ள வேறு மாவட்டத்துக்கு வழங்க தயாராகவுள்ளோம். அதே நேரத்தில், பாளையங்கோட்டையில் புதிய Turf அமைக்க ரூ.4 கோடி வரை செலவாகும். அண்ணன் நாகேந்திரன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை வழங்கினால், மீதி தொகையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நிச்சயம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம். நன்றி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வணக்கம்,
— Udhay (@Udhaystalin) July 15, 2023
சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டியாக, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கவுள்ளது. இதற்காக எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை கழக அரசு ரூ.15 கோடி செலவில் புனரமைத்து… https://t.co/Xt7RJQLXn5
இதற்கு பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள நயினார் நாகேந்திரன், "மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம் சென்னையில் 16 ஆண்டிற்குப் பிறகு நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சிறப்புடன் நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.
விளையாட்டு வீரர்கள் கோரிக்கையின் அடிப்படையில் கோரிக்கை வைத்தேன். அண்ணா விளையாட்டு அரங்கம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருப்பதால் எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி தர இயலாத சூழ்நிலை என்பதால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனுமதி அளித்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 50 லட்சம் வழங்கலாம் அல்லது விளையாட்டு வீரர்களின் நலன்கருதி தாங்கள் சிறப்பு நிதி ஒதுக்கி இக்கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றி தர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications