நாற்காலி பக்கத்திலேயே பணம் எண்ணும் மெஷின்.. சர்ச்சையான போட்டோ.. வானதி சீனிவாசன் விளக்கம்
சென்னை: தான் அமர்ந்து இருந்த இருக்கை அருகே பணம் எண்ணும் மெஷின் வைக்கப்பட்டிருந்தது, தொடர்பாக கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
எம்எல்ஏ அலுவலகத்திற்கு உள்ளே, அதுவும் அவரது இருக்கைக்கு பக்கத்தில் பணம் எண்ணும் மெஷின் எதற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சைகள் எழுந்த நிலையில் இதற்கான விளக்கத்தை அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
அப்படி என்ன படம் அது.. ஏன் சர்ச்சையானது, அதற்கு வானதி சீனிவாசன் என்ன விளக்கம் அளித்துள்ளார். இதோ முழுவிபரம்:

தன லாபம்
கோவை தெற்கு சட்டசபை தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர் தனது தொகுதியில் கடந்த ஜூன் மாதம் கட்சி அலுவலகம் திறந்தார். அப்போது அந்த அலுவலக அறை சுவரில் "தனலாபம்" என்று மஞ்சளில் எழுதி வைத்து பூஜை நடத்தப்பட்டது. பொதுவாக வியாபாரம் நடைபெறும் இடங்களில் தான் தன லாபம் என்று எழுதி வைத்து பூஜை நடப்பது வழக்கம்.

எஸ்வி சேகர் கிண்டல்
எம்எல்ஏ என்பது மக்களுக்காக சேவை செய்யக்கூடிய பணி. அந்த அலுவலகத்தில் இவ்வாறு எழுதி இருப்பது வேறு மாதிரி பொருள் தராதா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்தன. பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர் கூட இதை கிண்டல் செய்து ட்வீட் வெளியிட்டிருந்தார்.

வானதி புகைப்படம்
இந்த விவகாரம் சற்று மறந்து போயிருந்த நிலையில் தான் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வானதி சீனிவாசன் தொடர்பாக ஒரு புகைப்படம் வைரலாக சுற்றி வந்தது. வானதி சீனிவாசன் இருக்கையில் அமர்ந்தபடி இந்த டேப்லெட்டில் ஆலோசனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் தான் அது. வானதியின் வலப்பக்கம் பணம் எண்ணும் மெஷின், இடதுபுறம் கால்குலேட்டர் இருந்தன. எம்எல்ஏ தனது இருக்கைக்கு அருகே பணம் எண்ணும் இயந்திரம் வைத்திருப்பது ஏன் என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்தன.

வானதி சீனிவாசன் விளக்கம்
இந்த சர்ச்சைகளை கவனித்ததால் வானதி சீனிவாசன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். இன்று காலை ரேஸ் கோர்ஸில் மக்களை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வர நேரம் இல்லாத காரணத்தினால் நண்பரின் அலுவலகத்தில் காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டேன். இது எனது அலுவலகம் அல்ல . கவுண்டிங் மெஷின் இருப்பதும் எனக்கு தெரியாது.
அதற்குள் ஒரு சிலர் கற்பனை சிறகுகளை விரிக்கிறார்கள். இவ்வாறு வானதி சீனிவாசனம் விளக்கம் தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் கேள்வி
இருப்பினும் நெட்டிசன்கள் பலரும் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. பணம் எண்ணும் இயந்திரம் வைத்திருக்கக்கூடிய நண்பர் இருக்கையில் அமர்ந்து அவசரமாக பணியாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பியபடி இருக்கிறார்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
மாரிதாஸ் கைது! திமுக அரசின் பாணியையே தவெகவும் பின்பற்றுகிறதே! வானதி கண்டனம் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications