சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன் என்னாச்சு.. கனிமொழியை பார்த்து.. திடீரென அந்த கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. பரபரக்கும் டுவிட்டர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இது தான் விடியலா? CM MK Stalin-ஐ வெளுத்து வாங்கும் Vanathi Srinivasan | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக போடப்பட்டு இருக்கும் ஊரடங்கு காரணமாக கொரோனா வைரஸ் தொற்று கொஞ்சம், கொஞ்சமாக சரிந்து வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு 36,000-ஐ தாண்டிய கொரோனா தினசரி பாதிப்பு. தற்போது 15,000-க்குள் அடங்கி விட்டது.

    உற்சாகத்தில் 'குடி'மகன்கள்

    உற்சாகத்தில் 'குடி'மகன்கள்

    தமிழ்நாட்டில் ஊரடங்கு வருகிற 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு இல்லாத 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஒன்றுதான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பாகும். இந்த அறிவிப்பால் 'குடி'மகன்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

    27 மாவட்டங்களில் மட்டும்..

    27 மாவட்டங்களில் மட்டும்..

    27 மாவட்டங்களில் 15-ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்ததால்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    எதிர்க்கட்சிகள் கண்டனம்

    எதிர்க்கட்சிகள் கண்டனம்

    ஆனாலும் டாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், பா.ஜ.க.வின் குஷ்பு ஆகியோர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வின் வானதி சீனிவாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வானதியின் ட்வீட்

    கடந்த ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் திறந்து இருந்ததால் அதை எதிர்த்து தி.மு.க போராட்டம் நடத்தியது. அப்போது தி.மு.க எம்.பி. கனிமொழி, ''மக்களைப் பற்றி சிந்திக்காமல், மதுக்கடைகள் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவிக்கிறேன்'' என்று ட்வீட் போட்டிருந்தார். தற்போது கனிமொழியின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, ட்வீட் செய்துள்ள வானதி சீனிவாசன், '' இப்போது அண்ணன் மு.க.ஸ்டாலினிடம் என்ன, எப்படி கேட்பீர்கள். கனிமொழி '' என்று கூறியுள்ளார்.

    English summary
    BJP MLA Vanathi Srinivasan has condemned to will open Tasmac shops in tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X