"ஆபாச தாக்குதல்".. இந்த பாஜகவின் வக்கிரபுத்தி மாறவே இல்லை.. சித்தார்த்துக்கு ஆதரவாக பொங்கிய ஜோதிமணி

நடிகர் சித்தார்த்துக்கு ஜோதிமணி ஆதரவு தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இந்த பிஜேபியின் வக்கிரபுத்தி மாறவே இல்லை.. எனது போன் நம்பரை பொதுவெளியில் வெளியிட்டது மட்டுமல்லாமல் ஒரு பாலியல் தொழிலாளியின் நம்பர் என்று வேறு குறிப்பிட்டார்கள்... பாஜகவின் ஆபாச தாக்குதலுக்கு சித்தார்த் உள்ளாகி இருக்கிறார்.. அவருக்கு துணை நிற்கிறேன்" என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    என்ன ஆச்சு? Siddharth-க்கு குவியும் ஆதரவுகள் | I Stand With Siddharth | Oneindia Tamil

    அரசியல் சார்ந்த ட்வீட்களை, அதிலும் பாஜகவுக்கு எதிராக பதிவிடும் நடிகர்கள் மிக குறைவு.. பிரகாஷ்ராஜ்-க்கு அடுத்தபடியாக சித்தார்த்தை சொல்லலாம்..

    அரசியல் சார்ந்த ட்வீட்களை, அதிலும் பாஜகவுக்கு எதிரான பதிவிடும் நடிகர்கள் மிக குறைவு.. பிரகாஷ்ராஜ்-க்கு அடுத்தபடியாக சித்தார்த்தை சொல்லலாம்..

     பாஜக

    பாஜக

    கடந்த 2 வருடமாகவே மத்திய அரசின் நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் அதிருப்தியை பெற்று தந்து வருகிறது.. பல்வேறு விஷயங்களில் பாஜக மீது மக்கள் கோபமாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், தன் மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லவே இல்லை, யாராவது பொய் பிரச்சாரத்தை செய்தால், அந்த ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்தை சித்தார்த் விமர்சித்திருந்தார்..

     உபி முதல்வர்

    உபி முதல்வர்

    "பொய் சொன்னால் ஓங்கி அறை விழும்" என்று காட்டமாக கூறி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனையும், அந்த ட்விட்டரில் டேக் செய்து அவரை 'கொரோனாவின் கூட்டாளி' என்று சித்தார்த் விமர்சித்திருந்தார். சித்தார்த்தின் இந்த ட்வீட் நிறைய வரவேற்பும் எதிர்ப்புமாக வெடித்தது.. இந்நிலையில், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதாக சித்தார்த் நேற்று ஒரு பகீர் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

    மிரட்டல்

    மிரட்டல்

    தன்னுடைய போன் நம்பர் எப்படியோ, பாஜக உறுப்பினர்களிடம் லீக் ஆகிவிட்டதாகவும், அதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் தனக்கும், பலாத்காரம், கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்ததாக கூறி ஒரு ட்வீட் போட்டார்.. இந்த ட்வீட்டை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கும் டேக் செய்துள்ளார். என்ன நடந்தாலும் இனிமேல் தன் வாயை மூட போவதில்லை, முயற்சி பண்ணி பாருங்கள் என்றும் தன் முடிவை தெரிவித்திருந்தார்.

    சித்தார்த்

    சித்தார்த்

    சித்தார்த்தின் குற்றச்சாட்டு அதிர்ச்சியை தந்த நிலையில், நேற்று முதல் சித்தார்த்துக்கு சோஷியல் மீடியாவில் ஆதரவு பெருகி கொண்டிருக்கிறது. அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, சித்தார்த்துக்கு முதல் ஆதரவு குரலை எழுப்பி உள்ளார்.. இது சம்பந்தமாக 2 ட்வீட்களையும் பதிவிட்டுள்ளார்..

     கேவலம்

    கேவலம்

    அதில், "பணமதிப்பு நீக்கத்தின் போதுமோடியின் மக்கள் விரோதசெயலை விமர்சித்ததற்காக பிஜேபி எனது அலைபேசி எண்ணை பொதுவெளியில் வெளியிட்டது மட்டுமல்லாமல் ஒரு பாலியல் தொழிலாளியின் எண் என்று வேறு குறிப்பிட்டார்கள். பிஜேபியின் கேவலத்திற்கு நான் அஞ்சவில்லை. தொடர்ந்து விமர்சிப்போம்" என்று கூறியிருக்கிறார். இந்த ட்வீட்டுகளிலும் ஏராளமானோர் திரண்டு சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+