2 மனைவிகளை குழந்தைகளோடு தவிக்க விட்டு.. 3வது பெண் தேடுகிறாராம் அமீர்கான்.. பாஜக எம்பி சர்ச்சை பேச்சு
சென்னை: இரண்டு மனைவி திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற பிறகு , மூன்றாவது மனைவியை தேடும் நடிகர் அமீர்கான் போன்றவர்கள்தான் மக்கள் தொகை பெருக்கத்துக்கு காரணம் என்று பாஜக எம்பி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த லோக்சபா எம்பி சுதிர் குப்தா என்பவர் தான் இப்படி ஒரு பகீர் கருத்தை கூறியுள்ளார்.
ஒருபக்கம் உத்தரபிரதேச மாநில அரசு 2021-2030 வரையிலான மக்கள் தொகை கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது. அப்போது இரண்டு குழந்தைக்கு மேல் பெற்ற பெற்றோர் என்றால் அரசு வேலை கிடையாது, ரேஷனில் பொருட்கள் கிடையாது உள்ளிட்ட நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி பேசிய சுதிர் குப்தா அமீர்கானை வம்புக்கு இழுத்துள்ளார்.

நாட்டில் நிலம் அதிகரிக்கவில்லை
பாஜக எம்பி சுதிர் குப்தா கூறியது இதுதான்: நமது நாடு கூடுதலாக ஒரு இன்ச் நிலம் கூட பெருக்கிக் கொள்ளவில்லை. ஆனால் மக்கள் தொகை மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 140 கோடிக்கும் மேல் மக்கள் தொகை சென்றுவிட்டது. நாட்டு பிரிவினையின்போது, பாகிஸ்தானுக்கு அதிகப்படியான நிலப்பகுதி சென்று விட்டது. ஆனால், அப்போதே அங்கு குறைவான மக்கள்தொகைதான் இருந்தது. இது போதாது என்று, அங்கே ஏற்கனவே வசித்த பலர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்தனர்.

அமீர்கானுக்கு 2 மனைவி
நடிகர் அமீர்கான் முதல் மனைவி ரீனாவுக்கு குழந்தைகள் இருக்கின்றனர். அவரை விட்டுவிட்டு கிரண் ராவ் என்ற இரண்டாவது மனைவியை திருமணம் செய்தார். அவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது . இரு குடும்பத்தையும் தவிக்க விட்டுவிட்டு மூன்றாவது திருமணம் செய்ததற்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார் அமீர்கான்.

மக்கள் தொகை
இந்த நாட்டில் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு நிலவுவதற்கு அமீர்கான் போன்றவர்கள் காரணம். எந்த வேலையும் செய்வதற்கு அமீர்கான் போன்றவர்களுக்கு மூளை கிடையாது, முட்டை விற்பனை செய்வதற்கு தான் லாயக்கு என்று சிலர் கூறியது உண்மைதான்.

8 குழந்தைகள் பெற்ற பெண்
சமீபத்தில் பரிதாபாத் நகரில் 8 குழந்தை பெற்று கொடுத்துவிட்டு ஜோஜோ, என்ற பெண், பெண் மார்பக புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். தனது எட்டு குழந்தைகளும் இந்த உலகத்திற்கு கடவுளின் வார்த்தைகளை பரப்புவார்கள் என்று அந்தப்பெண் சந்தோஷப்பட்டு இருக்கக்கூடும். இதுதான் அவரது மனநிலையாக இருந்திருக்குமே தவிர, நாட்டை பற்றி யோசித்திருக்க மாட்டார்.

சர்ச்சை பேச்சு
நமது நாடு முன்னேற வேண்டுமென்றால் மக்கள் தொகை யை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நமது மக்களுக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார். பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் சமீபத்தில் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவ்வை பிரிந்துவிட்டார் . இந்த நிலையில்தான் நாட்டில் மக்கள்தொகை அதிகரிப்பதற்கு அமீர்கான் போன்றவர்கள் காரணம் என்று நேரடியாக பெயரை குறிப்பிட்டு, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பாஜக எம்பி.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications