Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைநிமிருது திருச்சி.. கிளாம்பாக்கத்தால் "யோகம்".. திடீர்னு துரைமுருகன் பல்டியால் குழம்புது தமிழ்நாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியை தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, தற்போது மீண்டும் எழுந்துள்ளது.. இது தொடர்பான விவாதங்களும், சட்டசபையில் நடத்தப்பட்டுள்ளது.

திருச்சியை தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்துக்கு புதியது கிடையாது.. திருச்சியை தமிழகத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை பகிரங்கமாகவே அன்று எம்ஜிஆர் வெளியிட்டார்.

BJP Nainar Nagendran asks that, Trichy be declared as the capital of the tamil nadu due to Kilambakkam Bus Stand

திருச்சி: திருச்சி, தமிழகத்தின் மையப் பகுதி எனவே அங்கு தலைநகரை மாற்றினால் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் அது பயன் தரும் என்பது அவரது கருத்து. ஆனால் அதிகாரிகள் மட்டத்தில் அப்போது அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் சொல்லவும், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதற்கு பிறகு, சென்னை மாநகரின் மக்கள் நெரிசல், குடிநீர்ப் பிரச்சினை உள்ளிட்டவற்றைத் தீர்க்க துணை நகரங்கள் அமைக்கலாம் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதன்படியே சில துணை நகரங்களும் உருவாகின. மறைந்த முதல்வர் கருணாநிதி காலத்திலேயே அவை ஆரம்பமாகியும் விட்டன. இருந்தாலும் அவையும் கூட போதுமான பலன் தரவில்லை.

என்ன காரணம்: அதற்கு பிறகு, திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்று கோரிக்கையை பெரிதாக யாரும் வலியுறுத்தவில்லை என்றாலும், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் மட்டும் இதுகுறித்து நினைவூட்டிக் கொண்டேயிருப்பார்.

சென்னையின் நெருக்கடியை தவிர்க்கவும், மக்களுக்கு எளிதாக வந்து போகும் விதத்திலும் அரசின் பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள் கட்டப்படுபவை திருச்சியில் இனிமேல் கட்டப்பட வேண்டும்.

வசதிகள்: இடவசதி, தண்ணீர் வசதி, சாலை வசதி, விமான வசதி, ரயில் வசதி, கல்வி மற்றும் மருத்துவ வசதி இப்படி துணை நகரத்திற்கு தேவையான அனைத்தும் திருச்சி மற்றும் திருச்சியையொட்டியே தாராளமாக உள்ளன என்கிற காரணங்களையும் திருநாவுக்கரசர் அடுக்கி வந்தார். சமீபத்தில்கூட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதே கருத்தை கூறியிருந்ததை திருநாவுக்கரசர் ஆதரித்து வரவேற்றிருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், திருச்சி தொடர்பான கோரிக்கையை மீண்டும் சட்டசபையில் எழுப்பியிருக்கிறார்.. இதுகுறித்து நேற்று சட்டசபையில் நடந்த விவாதம் இதுதான்:

நயினார் நாகேந்திரன்: திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு வருவதற்கு எவ்வளவு பஸ் கட்டணம் கொடுக்கிறார்களோ, அதே கட்டணத்தை கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் வருவதற்கு கொடுக்க வேண்டியுள்ளது. பிராட்வேயில் இருந்து கோயம்பேட்டுக்கு சென்றோம்... இப்போது, கிளாம்பாக்கத்துக்கு சென்றுள்ளோம். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து செங்கல்பட்டுக்கு பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தாலும் வரலாம்.

இது மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப ஏற்படும் சூழ்நிலை. இதைத் தவிர்க்க முடியாது. அதனால், தலைநகர் சென்னையை திருச்சிக்கு மாற்றிவிட்டால், குறைவான நேரத்தில் திருச்சிக்கு வந்துவிடலாம். போக்குவரத்து நெரிசல் உட்பட அனைத்தையும் தடுக்க முடியும்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்: தலைநகர் சென்னையை திருச்சிக்கு மாற்ற நல்ல யோசனை சொல்கிறீர்கள்... அப்படியே, தலைநகர் டெல்லியை சென்னைக்கு கொண்டு வந்தால் இன்னும் நன்றாக இருக்குமே.

அமைச்சர் துரைமுருகன்: தலைநகரை திருச்சிக்கு கொண்டு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அதனால், இங்கேயே இருக்கட்டும்.

நயினார் நாகேந்திரன்: திருச்சியை தலைநகராக ஆக்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கோரிக்கை.

பேரவைத் தலைவர் அப்பாவு: எம்ஜிஆர் அன்று கோரிக்கை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.. நினைத்தால் மாற்றியிருக்கலாம்" இவ்வாறு விவாதம் நடந்துள்ளது.

இந்நிலையில் நாம் இங்கு ஒரு விஷயத்தை நினைவூட்ட வேண்டியிருக்கிறது.. கடந்த நவம்பர் மாதம், மூத்த தலைவர் துரைமுருகன், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்..

மாநிலம்: அப்போது, "ஒரு தலைநகர் என்பது மாநிலத்தில் இருக்கும் அனைவரும் வந்து செல்ல ஏற்றதாக இருக்க வேண்டும்.. வரும் காலத்தில் நிச்சயம் திருச்சி தலைநகராக மாறும் இந்த திருச்சியைத் தலைநகராக்க வேண்டும் என எம்ஜிஆர் கருதினார். எனக்கு அதிமுகவை பிடிக்காது. ஆனாலும், அந்த கருத்து பிடிக்கும்.

டெல்லி ரொம்ப தூரத்தில் இருப்பதால் தான் நமக்கு அவர்கள் அந்நியமாகத் தெரிகிறார்கள். இந்தியாவின் தலைநகராக ஹைதராபாத் இருக்க வேண்டும். அதேபோல தமிழ்நாட்டின் தலைநகராக திருச்சி இருக்க வேண்டும். அதுதான் சரி.. யாராவது ஒருவர் வருவார்கள். நிச்சயம் இது நடக்கும்.

நிகழ்வுகள்: இந்த திருச்சி தானே அனைத்து கட்சிக்கும் முன்னோடி மாவட்டமாக இருந்துள்ளது. பல முக்கிய நிகழ்வுகள் திருச்சியில் தானே நடந்துள்ளது. வரலாற்று இந்த ஊரின் பெயர், இந்த ஊரில் இருக்கும் தலைவர்களின் பெயர் இல்லாமல் இருக்காது" என்று கூறியிருந்தார். ஆனால், இப்போது "தலைநகரை திருச்சிக்கு கொண்டு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அதனால், இங்கேயே இருக்கட்டும்" என்று கூறியிருப்பது திருச்சியை குழப்பியடித்து கொண்டிருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+